TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

இந்தியாவில் நடக்கும் மல்யுத்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்

இந்தியாவில் நடக்கும் மல்யுத்த தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்
X
By

Karthiga Rajendran

Published: 1 Feb 2020 7:06 AM GMT

பிப்ரவரி 18 முதல் 23 வரை புதுடில்லியில் நடைபெற இருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மல்யுத்த கூட்டமைப்பு (WFI), பாகிஸ்தான் அணி பங்கேற்பதில் எந்த சிக்கலும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கான விசா மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்களை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் துணை செயலாளர் வினோத் டோமர், "ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி வீரர்களின் ஆவணங்களை நாங்கள் பெற்றுள்ளோம். அந்த ஆவணங்களை ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

மல்யுத்தம்

இருப்பினும், பாகிஸ்தான் அணி தரப்பில் பேசிய ஃபரித் அலி, "பாகிஸ்தான் வீரர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்பங்களை இந்திய தூதரகம் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, நாங்கள் இந்திய மல்யுத்த கூட்டமை அணுகினோம். இதனால், ஒப்புதலுக்கு தேவையான ஆவணங்களை அனுமதிக்காக அனுப்பியுள்ளதாக அவர்கள் தெரிவித்ததால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்றார்.

மேலும், "2020 ஒலிம்பிக் தொடர் நெருங்குவதால், ஒவ்வொரு மல்யுத்த வீரருக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது மிகவும் முக்கியமாகும். ஒரு வேளை எங்களுக்கு விசா மறுக்கப்பட்டால், சர்வதேச ஒலிம்பிக் அமைப்பை அனுக உள்ளோம்" என தெரிவித்தார்.

முகமது பிலால், அப்துல் ரெஹ்மான், தயாப் ரசா, ஜமான் அன்வார் உள்ளிட்ட நான்கு வீரர்களுக்கும், இரண்டு அதிகாரிகளுக்கும் விசா கேட்டு பாகிஸ்தான் மல்யுத்த அமைப்பு விண்ணப்பித்துள்ளது.

மல்யுத்தம்

கடந்த ஆண்டு, புல்வாமா

பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடுதல் வீரர்களுக்கு இந்தியா

விசா மறுத்தது.

இதனால், சர்வதேச போட்டிகளை நடத்த இந்தியாவுக்கு

சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு தடை விதித்திருந்தது.

பின்னர், இந்திய அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவாதத்திற்குப் பிறகுதான் தடை நீக்கப்பட்டது. ஏற்கனவே, 2017 ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின்போது பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனினும், 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடந்த ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த மல்யுத்த வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

Next Story
Share it