Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
டேவிஸ் கப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றதை வெற்றியுடன் கொண்டாடிய லியான்டர் பயஸ்
குரேஷியாவிற்கு எதிரான டேவிஸ் கப் போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் முக்கிய அம்சமாக இரட்டையர் பிரிவில் லியான்டர் பயஸ் களமிறங்குவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த போட்டி வருகிற மார்ச் 6-7ஆம் தேதிகளில் ஷாக்ரப் நகரில் நடக்கவுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய குரேஷியாவிற்கு எதிராக ஒருமுறை மட்டுமே விளையாடி உள்ளது. 1995ல் டெல்லியில் நடந்த அந்த தொடரில் பயஸ் தனது ஒற்றையர் மட்டும் இரட்டையர் ஆட்டங்கள் இரண்டிலும் வென்று அசத்தியிருந்தார்.
அணியில் இடம்பெற்ற மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடுவது போலவே இன்று தொடங்கிய துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்த தொடர் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இவான் டோடிக் மற்றும் ஃபிலிப் போலசெக் ஜோடியை மேத்யூ எப்டனுடன் இனைந்து எதிர்கொண்ட பயஸ், ஆட்டத்தின் முடிவில் 6-4, 6-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
லியான்டர் பயஸ் டென்னிஸ் விளையாடும் கடைசி வருடம் இது என்பதால் அவரின் ஒவ்வொரு வெற்றியையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Next Story