TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஒலிம்பிக் குத்துச் சண்டை தகுதிப் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து ஜோர்டானுக்கு மாற்றம்

ஒலிம்பிக் குத்துச் சண்டை தகுதிப் போட்டிகள் கொரோனா வைரஸ் பாதிப்பால்  சீனாவிலிருந்து ஜோர்டானுக்கு மாற்றம்
X
By

Ashok M

Published: 25 Jan 2020 4:45 PM GMT

ஜப்பான்

தலைநகர் டோக்கியோவில் வரும்

ஜூலை 24-ம்

தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள்

நடக்க உள்ளன.

இதற்கான

தகுதிச்சுற்று போட்டிகள்

உலகின் வெவ்வேறு நாடுகளில்

நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில்,

சீனாவை

மிரட்டும் கொரோனா வைரசால்

குத்துச்

சண்டைக்கான ஒலிம்பிக்

தகுதிச்சுற்று போட்டிகள்

ரத்து செய்யப்பட்டன.

தற்போது அந்தப் போட்டிகள் ஜோர்டான் நாட்டில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நீண்ட நெடிய ஆய்விற்கு பிறகு குத்துச் சண்டைக்கான ஒலிம்பிக் தகுதி போட்டிகள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடத்த குத்துச்சண்டை குழு முடிவு எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

குத்துச் சண்டை தகுதிப் போட்டிகள்

இந்தப்

போட்டிகள் வரும் மார்ச் மாதம்

3ஆம்

தேதி முதல் 11ஆம்

தேதி வரை நடைபெறும் என்று

அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில்

உள்ள வுஹான் நகரத்தில் ‘கெரோனா

வைரஸ் நோய் தாக்குதலுக்கு

இதுவரை 41

பேர்

உயிரிழந்துள்ளனர்,

1300-க்கும்

மேற்பட்டோர் உடல் நலம்

பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக

ஒலிம்பிக் குத்துச் சண்டை

தகுதிப் போட்டிகளை நடத்த

தயாராக இருப்பதாக இந்திய

குத்துச் சண்டை ஆணையம் விருப்பம்

தெரிவித்தது.

இது

தொடர்பாக குத்துச்சண்டை

ஆணையத்தின் தலைவர் அஜய் சிங்

கூறியதாவது,

“ரத்து

செய்யப்பட்ட ஒலிம்பிக்

தொடருக்கான குத்துச்சண்டை

தகுதிச்சுற்று போட்டிகளை

இந்தியாவில் நடத்த அனுமதி

தந்தால்,

அதை

ஏற்று நடத்த நாங்கள் தயார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் 2020

புதுடில்லியில்

உள்ள இந்திரா காந்தி மைதான

வளாகத்தின் கே.டி

ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில்

போட்டிகளை நடத்த அனுமதி

கேட்போம்.

இங்கேதான்

2018-ம்

ஆண்டில் ஏ.ஐ.பி.ஏ

எலைட் மகளிருக்கான உலக

குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்

நடைபெற்றது.

எனவே

இந்தியாவில் நடத்த அனுமதி

அளிக்குமாறு சர்வதேச ஒலிம்பிக்

சங்கத்திடம் கோரிக்கை

வைத்துள்ளோம்” என்றார்.

சர்வதேச

குத்துச் சண்டை ஆணையத்தை

தற்போது சர்வதேச ஒலிம்பிக்

சங்கம் தடை செய்துள்ளது.

இதனால்

குத்துச் சண்டை தொடர்பான்

விஷயங்களை நிர்வாகிக்க ஒரு

குத்துச் சண்டை குழுவை

அமைத்துள்ளது.

இந்தக்

குழு தகுதிப் போட்டிகளை நடத்த

ஜோர்டன் நாட்டை தேர்ந்தெடுத்து

உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it