சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம்

60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இவர் தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

இதுவரை, 8 பேர் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். விகாஷ் கிருஷ்ணன் (69 கிலோ), அமித் பங்கால் (52 கிலோ), லோவ்லினா (69 கிலோ), மேரி கோம் (51 கிலோ),  சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ ) , ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதிஷ் குமார் (91 கிலோ) ஆகியோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரின் அரை இறுதிப்போட்டியில் மேரி கோம் விளையாடினார். சீனாவின் வைசாங்கை எதிர்கொண்ட அவர், 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால், மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

மற்றொரு அரையிறுதிப் போட்டியில், 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் வெற்றி பெற்றுள்ளார். தாய்வானின் சிஹ்-யி-வூவை எதிர்கொண்ட அவர், 4-1 என்ற கணக்கில் போட்டியை வென்றார். இதனால், இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கும் அவர், தங்கப்பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

75 கிலோ எடைப்பிரிவில் நடந்த அரையிறுதிப் போட்டியில், இந்தியாவின் பூஜா ராணி தோல்வியடைந்தார். இதனால், அவருக்கும் வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இந்தியா-ஆஸி. தொடரின் போது அதிகம் பேசப்பட்ட வீரர்கள் யார் யார் தெரியுமா?

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை இந்திய கிரிக்கெட் அணி வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்தச் சுற்றுப் பயணத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தது. எனினும் அதன்பின்னர் நடைபெற்ற டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்தது. இந்நிலையில் இந்தத் தொடர் முழுவதும் அதிகமாக ட்ரெண்டான வீரர்கள் என்றால் அது நடராஜன் மற்றும்...