TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: காலிறுதிக்கு இந்தியாவின் மேரி கோம் தேர்ச்சி

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: காலிறுதிக்கு இந்தியாவின் மேரி கோம் தேர்ச்சி
X
By

Karthiga Rajendran

Published: 8 March 2020 8:35 AM GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

51 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் மேரி கோம் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்தின் தஸ்மின் பென்னிக்கு எதிரான போட்டியில் 5-0 என வெற்றி பெற்றார். அடுத்து நடைபெறும் போட்டியில், பிலிப்பைன்ஸின் ஐரிஷ் மாக்னோவை மேரி கோம் எதிர்கொள்கிறார்

நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில், இந்தியாவின் அமித் பங்கல் வெற்றி பெற்றார். 52 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர், மங்கோலியாவின் என்க்மனாடக் கார்க்குவை எதிர்ர்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால், காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

அமித் பங்கல்

இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ) ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார், 63 கிலோ எடைப்பிரிவில் மனிஷ் கவுசிக், 81 கிலோ எடைப்பிரிவில் சச்சின் குமார், 69 கிலோ எடைப்பிரிவில் விகாஷ் கிருஷ்ணன் ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். காலிறுதிக்கு முன்னேறியுள்ள வீரர் வீராங்கனைகள் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக்கில் பங்கேற்பதை உறுதி செய்வார்கள். இதுவரை, 11 இந்திய வீரர் வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:

இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)

இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)

Next Story
Share it