சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள் விவரம்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகள் விவரம்

சீனாவில் நடைபெற இருந்த குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜோர்டனுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்குகிறது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

சீனாவில் நடைபெற இருந்த குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 13 வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர்

ஆண்கள் பிரிவில், இந்தியாவில் இருந்து அமித் பங்கல் மட்டுமே முன்னணி வீரர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். பெண்கள் பிரிவில், மேரி கோம், லோவ்லினா, பூஜா ராணி ஆகியோர் முன்னணி வீராங்கனைகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் வெற்றி பெறாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. பாரீஸில் மே 13 முதல் 20 வரை நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டி கடைசி வாய்ப்பாக அமையும்

ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:

இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)

இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)

ஆஸி.-இந்தியா பிரிஸ்பேன் டெஸ்ட்: வர்ணனையில் விவாத பொருளான ‘சக்கரை பொங்கல்’

சக்கரை பொங்கல்
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்கவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸை ஆடி வரும் இந்திய அணி வாஷிங்டன் சுந்தர் மற்றும் சர்தல் தாகூர் ஆகியோரி சிறப்பான ஆட்டத்தால் தடுமாற்றத்திலிருந்து சற்று மீண்டுள்ளது.  7ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 123 ரன்கள் சேர்த்து அசத்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இதில் வாஷிங்டன் சுந்தர் 49...