Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
ஏடிபி பெங்களூரூ சேலஞ்சர்: தொடரும் லியான்டரின் வெற்றி பயணம்
இந்திய டென்னிஸ் வரலாற்றில் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பெயர் - லியான்டர் பயஸ். இந்த வருடத்துடன் இவர் ஒய்வு பெறுகிறார் என்பது பலரையும் வருத்தமடைய செய்துள்ளது. பெங்களூரூவில் நடந்து வரும் ஏடிபி சேலஞ்சர் போட்டி தான் இந்தியாவில் அவர் விளையாடும் கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் அவர் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே அனைவருது விருப்பமாகும். ரசிகர்களை ஏமாற்றாமல் இந்த தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார் பயஸ். மேத்யூ எப்டனுடன் இணைந்து இன்றைய ஆட்டத்தில் ஆன்ட்ரே மற்றும் கிறிஸ்டோபர் இணையை வீழ்த்தி அரைஇறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.
மற்ற ஆட்டங்களில், ராம்குமார் ராமநாதன், புரவ் ராஜா இணையும் மற்றும் சாகேத் மைனேனி, மாட் ரெய்ட் இணையும் தங்களது ஆட்டங்களில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.
Next Story