அண்மை செய்திகள்
ஐந்து முறை தோல்வி; ஆறாவது முறை வெற்றி: சாதித்த தமிழ்நாட்டு கூடைப்பந்து சிறுமிகள்

கேலோ
இந்தியா யூத் கேம்ஸ் 2020
தற்போது
அசாம் மாநிலத்தில் நடைபெற்று
வருகிறது.
இதில்
17
வயதுக்குட்பட்டோருக்கான
பெண்கள் கூடைப் பந்து போட்டியில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த அணி
தங்கப்பதக்கம் வென்று
அசத்தியுள்ளது.
தமிழ்நாட்டுச்
சிறுமிகள் இறுதிப் போட்டியில்
ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டனர்.
இந்தப்
போட்டியில் இரண்டு புள்ளிகள்
வித்தியாசத்தில் தமிழ்நாடு
அணி சாம்பியன் பட்டத்தை
வென்றது.
இந்தப்
போட்டி முடிந்தவுடன் தமிழ்நாட்டு
அணியின் நட்சத்திர வீராங்கனை
நிவேதா ஒரு நிமிடம் கண்ணீர்
மல்க அழுதார்.
அவரை
அணியின் பயிற்சியாளர் ராம்
பிரசாத் தட்டிக் கொடுத்து
சமாதானப்படுத்தினார்.
ஏன் நிவேதா அழுதார்? அதற்குப் பின் உள்ள காரணம் என்ன? அதை அவரே கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர், “நாங்கள் அனைவரும் ஒரு அணியாக கடந்த 4 ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். இதுவரை நாங்கள் 5 முறை இறுதிப் போட்டிக்கு சென்று இருக்கிறோம். ஆனால் ஒரு முறை கூட எங்களால் பட்டத்தை வெல்ல முடியவில்லை. எல்லா முறையும் நாங்கள் இரண்டாவது பரிசை மட்டுமே பெற்றுக் கொண்டு வந்தோம்.
அதிலும்
குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற
கேலோ இந்தியா போட்டியிலும்
நாங்கள் வெள்ளிப் பதக்கமே
வென்றோம்.
அதன்பின்னர்
கடந்த ஆண்டு நடைபெற்ற யூத்
கேம்ஸ் போட்டியிலும் நாங்கள்
இறுதி போட்டியில் தோல்வி
அடைந்தோம்.
இம்முறை
இறுதிப் போட்டியில் வெற்றி
அடைந்தது மிகவும் மகிழ்ச்சி
அளிக்கிறது.
போட்டி
முடிந்தவுடன்,
17வயது
பிரிவில் இதுதான் எனது கடைசி
போட்டி என்பதை நான் உணர்ந்தேன்.
அந்த
நேரத்தில் எனக்கு கட்டுபடுத்த
முடியாத அழுகை வந்துவிட்டது.
எனினும்
தோல்வியே சந்தித்து கொண்டு
இருந்த போது இறுதியில்
வெற்றியுடன் விடை பெறுவது
மிகுந்த மகிழ்ச்சியாக
இருக்கிறது”எனத் தெரிவித்தார்.
மேலும்
இதுகுறித்து பயிற்சியாளர்
ராம்பிரசாத்,
“இந்த
அணி ஏற்கெனவே 5
இறுதி
போட்டிகளில் தோல்வி
அடைந்திருக்கிறது.
கடந்த
வருடத்தில் இந்த அணி இரண்டு
முறை இறுதி போட்டிக்குச்
சென்று தோல்வி அடைந்தது.
இதில்
விளையாடும் வீரர்கள் அனைவரும்
3 முதல்
4
ஆண்டுகள்
ஒன்றாக விளையாடியவர்கள்.
இதனால்
அவர்களுக்கு தோல்வியிலிருந்து
மிள்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டனர்”
எனக் கூறினார்.
நேற்று
நடைபெற்ற கேலோ இந்தியா இறுதிப்
போட்டியிலும் தமிழ்நாட்டு
அணி கிட்டதட்ட தோல்வியை
தழுவும் நிலையில் இருந்தது.
ஏனென்றால்
முதல் கால் பகுதியில் தமிழ்நாடு
அணி ராஜஸ்தான் அணிக்கு 7
புள்ளிகள்
முன்னிலை கொடுத்தது.
அதன்பின்னர்
முதல் பாதி ஆட்டத்தின் முடிவில்
அந்த முன்னிலை 5
புள்ளிகளாக
இருந்தது.
கடைசி
கால் பகுதியில் பயிற்சியாளர்
கொடுத்த அறிவுரை கேட்ட
வீராங்கனைகள் சிறப்பாக
விளையாடி இரண்டு புள்ளிகள்
வித்தியாசத்தில் வெற்றிப்
பெற்றனர்.
இதன்மூலம்
நாம் புரிந்து கொள்ளவேண்டியது
ஒன்றுதான்.
அதாவது
எவ்வளவு முறை தோல்வியை
தழுவினாலும்,
நாம்
அதனை நினைத்து பயந்து ஒதுங்காமல்,
அது
கற்று தரும் பாடத்தை புரிந்து
கொள்ளவேண்டும்.
அத்துடன்
மேலும் தீவிரமாக உழைத்தால்
வெற்றி நிச்சயம் என்பதற்கு
இந்தச் சிறுமிகளே ஒரு நல்ல
அடையாளமாக உள்ளனர்.