TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

இழந்த அரசு வேலையை போராடி திரும்ப பெற்ற பாராலிம்பிக் பதக்க வீரர் சேத்தன்

இழந்த அரசு வேலையை போராடி திரும்ப பெற்ற பாராலிம்பிக் பதக்க வீரர் சேத்தன்
X
By

Ashok M

Published: 5 Feb 2020 10:51 AM GMT

கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியைச் சேர்ந்தவர் சேத்தன். இவருக்கு பிறப்பிலிருந்தே சில ஹார்மோன் குறைபாடு இருந்ததால் இவர் தகுந்த வளர்ச்சியில்லாமல் இருந்து வருகிறார். தனது கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமால் சேத்தன் பேட்மிண்டன் பயிற்சி செய்துள்ளார்.

அதில் திறம்பட செயல்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு சர்வதேச அளவில் வளர்ச்சி குன்றிய மனிதர்களுக்கு நடத்தப்பட்ட பாராலிம்பிக் தொடரில் இவர் பங்கேற்றுள்ளார். அதில் பேட்மிண்டன் விளையாட்டில் சேத்தன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பின்னர் 2012ஆம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட முதுகு தண்டு காயத்தால், இவரால் பேட்மிண்டன் விளையாட முடியாமல் போனது. இதனால் அவர் தகுந்த வருமானமின்றி தவித்துள்ளார்.

பாராலிம்பிக் வீரர் சேத்தன்
சேத்தன்

இந்தச் சூழலில் இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக தலைமை செயலகத்தில் ஒப்பந்த வேலை ஒன்று கிடைத்துள்ளது. அதை நினைத்து அவர் சற்று மகிழ்ச்சி அடைவதற்குள் அவருடைய வேலை பரி போகியுள்ளது. கர்நாடகவில் புதிய அரசு ஆட்சியேற்ற பிறகு இவருக்கு கிடைத்த ஒப்பந்த வேலை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசு உயர் அதிகார்களிடம் முறையிட்டுள்ளார்.

இதுதொடர்பான செய்தியை 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' தளம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் கர்நாடக தலைமை செயலகத்தில் பணி கிடைத்துள்ளது. இதுகுறித்து சேத்தன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், "என்னைப் பற்றிய செய்தி பத்திரிகைகளில் வந்தவுடன் தொழிலாளர் நலத் துறையிலிருந்து எனக்கு தொலைப் பேசி அழைப்பு வந்தது. அப்போது அவர்கள் என்னுடைய விவரங்களை அனுப்பும்படி தெரிவித்தனர். நான் அனுப்பினேன்.

பாராலிம்பிக் வீரர் சேத்தன்

அவை அனைத்தையும் அவர்கள் சரி பார்த்து விட்டு எனக்கு தற்போது எனக்கு தொலைதொடர்பு துறையில் ஒரு பிரிவில் வேலை கிடைத்துள்ளது. அத்துடன் மாதம் 25ஆயிரம் ரூபாய் சம்பளமும் கிடைத்துள்ளது" என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தொழிலாளர் துறையின் செயலாளர் மணிவண்ணன் ஐஏஎஸ், "இதுமிகவும் துர்தஷ்டசவசமான சம்பவம். அவருடைய சான்றிதழ்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு அவருக்கு உரிய வேலை வழங்கப்படும்" எனத் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியதை போல் தற்போது சான்றிதழ் சரி பார்ப்பிற்கு பின் சேத்தனுக்கு மீண்டும் அரசுப் பணி கிடைத்துள்ளது. சாதாரணமாக இருக்கும் மனிதர்களே தங்களது உரிமைகளுக்காக போராட தயங்கும் நேரத்தில் ஒரு மாற்றுத் திறனாளியான சேத்தன், தனது உரிமைக்காக போராடியது ஒரு பெரிய முன்னுதாரணமாக நம் முன் இருக்கிறார். விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்வில் எப்போதும் வெற்றி தான் என்பதற்கு சேத்தன் ஒரு சான்றாக அமைகிறார்.

Next Story
Share it