TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

கமலா ஹாரிஸிற்கு 'மேடம் விபி' என்ற ஜெர்ஸியை வழங்கிய கூடைப்பந்து அணி!

கமலா ஹாரிஸிற்கு மேடம் விபி என்ற ஜெர்ஸியை வழங்கிய கூடைப்பந்து அணி!
X
By

Haripriya

Published: 21 Jan 2021 9:42 AM GMT

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் நேற்று பதவியேற்று கொண்டார். கமலா ஹாரிஸின் பூர்வீகம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமமாகும். சுதந்திர அமெரிக்க வரலாற்றில் பெண் ஒருவர் செனட் சபையை நடத்தப்போவது இதுவே முதல் முறையாகும். இப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த சாதனையை புரிந்துள்ள கமலா ஹாரிஸிற்க்கு ஒரு கூடைப்பந்து அணி பெரிய கௌரவும் செய்துள்ளது.

அமெரிக்காவின் 49 ஆவது துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுள்ளார். இதனை நினைவுகூரும் வகையில், அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து அணியான கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ், இவருக்கு 49 என்ற எண் மற்றும் “மேடம் விபி” என்று பதிக்கப்பட்ட ஜெர்ஸியை வழங்கியுள்ளது.

இவர் அமெரிக்காவின் ஓக்லாண்ட் பகுதியைச் சேர்ந்தவர். அந்தப் பகுதியை மையமாக கொண்டு தான், கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணி 1971 முதல் 2019 வரை என்பிஏ தொடரில் விளையாடி வந்தது. வாரியர்ஸின் நட்சத்திர வீரர் ஸ்டீபன் கரியும் ஹாரிஸிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கூடைப்பந்து அணியின் இந்த நெகிழ்ச்சியான செயல் குறித்து கமலா ஹாரிஸ், “நான் இந்த ஜெர்ஸியை மிகவும் பெருமையுடன் வெள்ளை மாளிகையில் வைப்பேன். வாரியர்ஸ் அணி எப்போதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. நான் ஓக்லாண்டின் மகள் என்று சொல்வதில் பெருமை அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: 25 ஆண்டுகளுக்கு முன்பாக கின்னஸ் சாதனைப் படைத்த குற்றாலீஸ்வரன் நீச்சல் விளையாட்டை விட்டது ஏன்?

Next Story
Share it