அண்மை செய்திகள்
மகளிர் கால்பந்து லீக் 2020: முதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேது எஃப்சி அசத்தல் வெற்றி
மகளிர் கால்பந்து லீக்(ஐ.டபிள்யூ.எல்)2020 போட்டிகள் பெங்களூருவில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் நடப்புச் சாம்பியன் அணியான சேது எஃப்சி அணி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்று உள்ளன. இவை அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில்
தமிழ்நாட்டைச் சேர்ந்த சேது
எஃப்சி அணி குரூப்-ஏ
பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில்
நேற்று நடப்புச் சாம்பியன்
சேது எஃப்சி அணி கோலாபூர்
எஃப்சி அணியை தனது முதல்
போட்டியில் எதிர்கொண்டது.
இந்த
ஆட்டத்தின் 18ஆவது
நிமிடத்தில் அம்சவள்ளி தனக்கு
கிடைத்த வாய்ப்பை கோலாக்கினார்.
இதனால்
சேது எஃப்சி அணி 1-0
என
முன்னிலை பெற்றது.
பின்னர்
இரு அணியின் வீராங்கனைகளும்
கோல் போட எடுத்த முயற்சி பயன்
அளிக்காததால் முதல் பாதி
ஆட்டத்தின் முடிவில் ஸ்கோர்
1-0 என
இருந்தது.
இதனைத்
தொடர்ந்து இரண்டாவது பாதி
ஆட்டத்தில் 61ஆவது
நிமிடத்தில் சந்தியா அசத்தலாக
கோல் அடித்தார்.
அதன்பின்னர்
64ஆவது
நிமிடத்தில் சுமித்ரா கோல்
அடித்து ஸ்கோரை 3-0
என
உயர்த்தினார்.
இதனையடுத்து
66ஆவது
நிமிடத்தில் சந்தியா மீண்டும்
ஒரு கோல் அடித்தார்.
இதனால்
சேது எஃப்சி அணி 4-0
என
முன்னிலை பெற்றது.
இறுதியில்
கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில்
சந்தியா சிறப்பாக மற்றொரு
கோல் அடித்து ஹாட்ரிக் கோல்
சாதனையை நிகழ்த்தினார்.
இதன்மூலம்
சேது எஃப்சி அணி 5-0
என்ற
கணக்கில் கோலாபூர் எஃப்சி
அணியை வீழ்த்தியது.
இந்த
ஆண்டு நடைபெறும் லீக் தொடரில்
முதல் போட்டியிலேயே ஹாட்ரிக்
எடுத்து சந்தியா அசத்தியுள்ளார்.
நடப்புச்
சாம்பியனான சேது எஃப்சி அணி
தனது முதல் போட்டியிலேயே
சிறப்பாக விளையாடி பிற அணிகளை
மிரள வைத்துள்ளது.
மூன்று
வாரம் நடைபெறும் இந்தத்
தொடரில் இறுதியாக வெற்றிப்
பெறும் அணிக்கு 10
லட்சம்
ரூபாய் பரிசாக வழங்கப்பட
உள்ளது.
சேது எஃப்சி அணி கடந்த 2016ஆம் ஆண்டு சீனி மோஹிதீன் என்பவரால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மகளிர் வீராங்கனைகளைக் கொண்டு தொடங்கப்பட்ட முதல் கால்பந்து கிளப் அணி இது தான். இந்த அணி 2017ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் லீக் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. 2017ஆம் ஆண்டு சேது எஃப்சி அணி லீக் தொடரில் அரையிறுதி போட்டி வரை தகுதி பெற்றது. கடந்த ஆண்டு லீக் தொடரை கைப்பற்றி சேது எஃப்சி அணி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.