அண்மை செய்திகள்
ஜடிடிஃஎப் ஹங்கேரியன் ஒபன் 2020: அசத்திய சரத்கமல், சத்யன் கூட்டணி; அதிரடி காட்டிய மணிகா

ஹங்கேரியில் நடந்து வரும் இந்த தொடரில் நேற்றைய நாள் ஆட்டங்கள் இந்திய வீரர்களுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. முதலாவதாக நடந்த ஆட்டத்தில் இரானை சேர்ந்த நோஷத்தை 6-11, 6-11, 9-11, 2-11 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஞானசேகரன்.
பின்னர் ஆடவர் இரட்டையர் பிரிவில் மூத்த வீரரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான அச்சான்டா சரத்கமலுடன் இணைந்து 11-6, 11-8, 8-11, 9-11, 11-9 என போராடி ஜப்பான் ஜோடியான யுக்கியா, ஷுன்ஷுகேவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தனர். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் கலப்பு இரட்டையர் பிரிவில் மணிகா பட்ராவுடன் இணைந்து ஹங்கேரி ஜோடியான ஆடம், பெர்கள் ஆகியோரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் சரத்கமல். இந்த கடின வெற்றிக்கு மேலுமொரு பரிசாக, காலிறுதி போட்டியிலிருந்து அவர்களுது எதிரண் விலக அரையிறுதிக்கு முன்னேறியது சரத்கமல், மணிகா ஜோடி.
அத்துடன் நில்லாமல் உலகத்தரவரிசையில் 26ஆம் இடத்தில் இருக்கும் தைபே வீராங்கனையான சென் ஷு-யூவை வீழ்த்தி தனது விளையாட்டு கரியரில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளார் மணிகா பட்ரா. இந்த ஆட்டத்தில் 9-11, 4-11, 7-11, 12-10, 11-9, 11-7, 14-12 என நீண்ட கடின போராட்டத்திற்கு பின் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.