TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் "பவர் ப்ளேயர்" விருதினை வென்ற வாஷிங்டன் சுந்தர் - நெகிழ்ச்சியான பெயர் காரணம் என்ன?

ஐபிஎல்: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பவர் ப்ளேயர் விருதினை வென்ற வாஷிங்டன் சுந்தர் - நெகிழ்ச்சியான பெயர் காரணம் என்ன?
X
By

Ajanth Selvaraj

Published: 29 Sep 2020 11:45 AM GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் ஒவ்வொரு நாளும் சரவெடியான ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது. அதேபோல் நேற்று நடந்த ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. ஆட்டம் முழுவதும் சிக்சர் மழை பொழிந்த நிலையில் ஒரே ஒரு பந்துவீச்சாளர் மட்டும் தனது பந்துவீச்சினால் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளார். 4 ஓவர்கள் வீசி வெறும் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டெயும் வீழ்த்தி அசத்திய அவர் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் தான்.

பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான டி20 போட்டிகளில் இவ்வளவு குறைவான ரன்களை விட்டுக் கொடுப்பது மிகப்பெரிய விஷமாகும், அதுவும் மும்பை போன்ற தரமான அணிக்கு எதிராக செய்தது மேலும் சிறப்பாகும். மேலும் முத்தாய்ப்பாக கடினமான பவர்ப்ளே சமயத்தில் 3 ஓவர்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒரே ஆட்டத்தில் பல சிறப்புகளை செய்த இவரின் வித்தியாசமான பெயருக்கும் ஒரு முன்காரணம் உள்ளது.

ஐபிஎல் ஐபிஎல்

2016 யு-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதினால் கவனம் ஈர்த்த இவருக்கு அவரது பெயரும் கூடுதல் கவனம் தேடி தந்தது. வாஷிங்டனுக்கு இந்த பெயரை வைத்தவர் அவரது தந்தை சுந்தர். அவரும் ஒரு கிரிக்கெட் வீரர் தான், ஆனால் அவரால் தமிழ் நாடு அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சுந்தருக்கு காட்பாதராக இருந்தவர் தான் பி டி வாஷிங்டன். பெரிய கிரிக்கெட் ரசிகரான இவர் சுந்தரின் திறமையை பார்த்து அவரின் படிப்பு செலவுகளுக்கும் விளையாட்டு செலவுகளுக்கும் உதவி செய்தார். அவர் செய்த நன்றி மறவாமல், அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே தனது மகனுக்கு வாஷிங்டன் என்ற பெயரை சூட்டினார் சுந்தர்.

வாஷிங்டன் சுந்தரும் இவர்கள் இருவரையும் பெருமைப்படுத்தும் விதமாகவே தற்போது வரை சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய போட்டியில் இவர் வெளிப்படுத்திய திறமையான பந்துவீச்சுக்கு சச்சின் டெண்டுல்கர், ரவி சாஸ்திரி, இயன் பிஷப் உட்பட பல ஜாம்பவான்களிடம் இருந்து பாராட்டுக்கள் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட நாமும் வாழ்த்துவோம்.

மேலும் படிக்க: டேவிட் வார்னரை கலங்கடித்த வருண் சக்ரவர்த்தி – ஐபிஎல் தொடரில் கலக்கும் மற்றொரு மாயாஜால தமிழன்

Next Story
Share it