அண்மை செய்திகள்
ஐபிஎல் ஏலத்தில் ஒரு கோடிக்கு எடுக்கப்பட்ட டெம்போ ஓட்டுநரின் மகன்!

ஐபிஎல் 2021-ஆம் ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் டெம்போ ஓட்டுநரின் மகனான சேதன் சகரியா 1.20கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.யார் இவர்? இவர் கடந்து வந்த பாதைகள் என்ன?
1998-ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்தவர் சேதன் சகரியா. சிறுவயதிலிருந்தே இவருக்கு கிரிக்கெட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. இவர் தந்தை குஜராத்தில் டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வந்தவர். அதனால் சேத்தனை படிப்பில் கவனம் செலுத்துமாறு பெற்றோர் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் சேத்தனின் கிரிக்கெட் கனவிற்கு இவரின் மாமா பக்கபலமாக இருந்துள்ளார்.
இவரின் விடாமுயற்சியால் 19-வயதுக்கு உட்பட்டோருக்கான சௌராஷ்டிரா அணியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரில் 18-விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்பிறகு 2018-2019 ம் ஆண்டின் ரஞ்சிக் கோப்பையில் பங்கேற்றுள்ளார். முன்னனி வீரரான ஜெயதேவ் உனத்கட்டிற்கு காயம் ஏற்பட்டதால் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடரின் முடிவில் இவர் 30 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இதை தொடர்ந்து சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு நெட் பவுலராக செயல்பட்டார். இந்தச் சூழலில் இந்த வருடத்திற்கான நடந்த ஐபிஎல் ஏலத்தில் 1.20 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி இவரை எடுத்துள்ளது.
இந்த சந்தோஷத்தை அவர் அனுபவிப்பதற்குள் இவரின் தம்பியான ராகுல் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதனால் சேதனை மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். இந்த நிகழ்விலிருந்து மீண்டு வரும் ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக விளையாடுவார் என்று நம்புவோம்.
மேலும் படிக்க: 'பஞ்சாப் அணியில் ஷாரூக் கான்'- மகிழ்ச்சியில் பிரீத்தி ஜிந்தா