புதன்கிழமை, அக்டோபர் 28, 2020
Home அண்மை செய்திகள் ரஷித் கானின் மனைவி அனுஷ்கா சர்மா அதிர்ச்சியளித்த கூகுள் சர்ச்!

ரஷித் கானின் மனைவி அனுஷ்கா சர்மா அதிர்ச்சியளித்த கூகுள் சர்ச்!

திருமணமாகாத ரஷித் கானிற்கு மனைவி அனுஷ்கா சர்மா என்ற கூகுள் தேடல் முடிவு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் இளம் வீரர் ரஷித் கான். இவரது தனது மாயஜால சுழல் பந்து வீச்சால் பல அணி வீரர்களை திணறடித்துள்ளார். இவர் தனது திறமையினால் பல டி20 தொடர்களிலும் களமிறங்கி வருகிறார். இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பேட்ஸ்மென்களை திணறடித்த ரஷித் கானை தற்போது கூகுள் சர்ச் மிகவும் திணற வைத்துள்ளது. கூகுள் தேடலில் கிரிக்கெட் வீரர் ரஷித் கானின் மனைவி என்ற டைப் செய்தால் உடனே அனுஷ்கா சர்மாவின் பெயர் மற்றும் புகைப்படும் வந்துள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


அனுஷ்கா சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவி ஆவார். இவர்கள் இருவருக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இந்தச் சூழலில் அனுஷ்கா புகைப்படம் வந்தது பெரிய குழப்பத்தை ஏற்பட்டுள்ளது.

22வயதான ரஷித் கானிற்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அவர் ஏற்கெனவே ஒரு முறை தனது திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற பிறகே தனக்கு திருமணம் என்ற கருத்தை ரஷித் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாத ரஷித் கானிற்கு மனைவி அனுஷ்கா சர்மா என்ற கூகுள் தேடல் முடிவு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுபோன்ற தவறுகளை பின் வரும் நாட்களில் கூகுள் செய்யக் கூடாது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

மேலும் படிக்க: ஐபிஎல் வீரர்கள் பிராண்ட் வேல்யூவில் கோலியை பின்னுக்கு தள்ளிய தோனி!

ஐபிஎல்: தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற போராடும் மன்தீப் சிங்!

நடப்பு ஐபிஎல் தொடரில் மன்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 23ஆம் தேதி இரவு மன்தீப் சிங்கின் தந்தை ஹர்தேவ் சிங் காலமானார். தந்தையின் மரண துயரத்தை தாங்கி கொண்டு மன்தீப் சிங் 24ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். இது அவருக்கு பலரிடமிருந்து மரியாதையை பெற்று தந்தது. இந்நிலையில் மன்தீப் சிங் தந்தையின் கடைசி...