TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐபிஎல்: ‘பூரனின் இரட்டை இமாலைய சிக்சர் டூ தோனியின் சிக்சர் வரை’- டாப் 5 சிக்சர்கள்

ஐபிஎல்: ‘பூரனின் இரட்டை இமாலைய சிக்சர் டூ தோனியின் சிக்சர் வரை’-  டாப் 5 சிக்சர்கள்
X
By

Ashok M

Published: 20 Oct 2020 2:28 AM GMT

ஐபிஎல் தொடர் இரண்டாவது பாதியில் தற்போது உள்ளது. அனைத்து அணிகளும் கிட்டதட்ட 10 போட்டியை நெருங்கியுள்ளன. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் தற்போது வரை மிகவும் நீளமான டாப் 5 சிக்சர்கள் என்ன? அதனை அடித்தவர்கள் யார் யார்?

5. மகேந்திர சிங் தோனி (102 மீட்டர்):

இந்தப் பட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 5ஆவது இடத்தில் உள்ளார். சென்னை-ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடராஜனின் பந்தை அசத்தலாக 102 மீட்டர் சிக்சருக்கு விரட்டி தோனி துவம்சம் செய்தார். மேலும் இதற்கு முன்பு ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் சிக்சர் அடித்து பந்தை மைதானத்திற்கு வெளியே விரட்டி தோனி அசத்தியிருந்தார்.

4. சஞ்சு சாம்சன் (102 மீட்டர்):

ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுபவர் சஞ்சு சாம்சன். நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்சன் சிக்சர் மழை பொழிது வருகிறார். இவர் சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 102 மீட்டர் சிக்சர் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியில் இவர் 19 சிக்சர்களுடன் முதலிடத்தை இரண்டு வீரர்களுடன் பகிர்ந்துள்ளார்.

3. ஜோஃப்ரா ஆர்ச்சர்(105 மீட்டர்):

நடப்பு ஐபிஎல் தொடரில் பந்து வீச்சில் மட்டும் கலக்காமல் பேட்டிங்கிலும் அவ்வப்போது ஆர்ச்சர் அசத்தி வருகிறார். அவருக்கு கிடைக்கும் பேட்டிங் வாய்ப்பில் பந்தை லாவகமாக சிக்சருக்கு விரட்டி ஆர்ச்சர் அதிரடி காட்டி வருகிறார். இவர் சென்னை அணியின் நிகிடியின் பந்தில் 105 மீட்டர் சிக்சர் அடித்து அதிர வைத்தார். மேலும் அந்தப் போட்டியில் 4 சிக்சர்கள் விளாசி அனைவரையும் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் ஆர்ச்சர் கவர்ந்தார்.

2. நிக்கோலஸ் பூரன்(105 மீட்டர்):

இந்த ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் கடந்து அசத்தியவர் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன். இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இந்த இமாலய சிக்சரை விரட்டி அசத்தினார். அந்தப் போட்டியில் 17 பந்துகளில் அரைசதம் கடந்து பூரன் அதிர வைத்தார்.

1.நிக்கோலஸ் பூரன்(106 மீட்டர்):

நடப்பு ஐபிஎல் தொடரில் நீளமான சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியில் முதல் இரண்டு இடங்களிலும் பூரன் தான் பிடித்துள்ளார். இவர் 106 மீட்டர் இமாலய சிக்சர் மூலம் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இத்தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் பூரன் முதலிடத்தில் உள்ளார். அவர் இதுவரை 19 சிக்சர்கள் விளாசி அதிரடி காட்டியுள்ளார்.

மேலும் படிக்க: ‘படிக்கல் டூ நடராஜன்’- குறைவாக ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதித்த உள்ளூர் வீரரகள்

Next Story
Share it