புதன்கிழமை, அக்டோபர் 28, 2020
Home அண்மை செய்திகள் ஐபிஎல்: “ஜெயித்தாலும் தோற்றாலும் எப்போதும் தோனி ரசிகர்”- வீட்டிற்கு மஞ்சள் நிறம் அடித்த சிஎஸ்கே ஃபேன்

ஐபிஎல்: “ஜெயித்தாலும் தோற்றாலும் எப்போதும் தோனி ரசிகர்”- வீட்டிற்கு மஞ்சள் நிறம் அடித்த சிஎஸ்கே ஃபேன்

12ஆவது ஐபிஎல் தொடர் தற்போது யுஏஇயில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதனால் சென்னை ரசிகர்கள் சற்று உத்வேகம் இழந்து காணப்படுகின்றனர்.

இந்நிலையில் அவர்களுக்கு நல்ல உத்வேகம் அளிக்கும் வகையில் ரசிகர் ஒருவர் தனது வீட்டை மஞ்சள் நிறத்தால் வண்ணம் பூசி அச்சரியப்பட வைத்துள்ளார். கடலூரை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் தனது வீட்டிற்கு சிஎஸ்கே அணியின் நிறத்தை பூசியுள்ளார். அத்துடன் தனது வீட்டின் மேல் தோனியின் ரசிகர் வீடு என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இந்தியா டூடேவிற்கு அளித்தப் பேட்டியில், “இம்முறை ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்க்க முடியவில்லை. அத்துடன் தோனியின் ஆட்டத்தையும் நேரில் காண முடியவில்லை. மேலும் பலர் தோனியை விமர்சிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. தோற்றாலும் ஜெயித்தாலும் நான் எப்போதும் தோனியின் ரசிகர் தான்” எனத் தெரிவித்துள்ளார்.

கோபால கிருஷ்ணன் தனது வீட்டிற்கு மஞ்சள் நிற வண்ணம் பூச மொத்தமாக 1.5 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். தனது வீட்டின் ஒரு பக்க சுவரில் அவர் ‘விசில் போடு’ என்ற சிஎஸ்கே அணியின் டேக் லைனையும் எழுதியுள்ளார். கோபால கிருஷ்ணனின் இந்தச் செயலை அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ஐபிஎல் வீரர்கள் பிராண்ட் வேல்யூவில் கோலியை பின்னுக்கு தள்ளிய தோனி!

ஐபிஎல்: ’கொரோனா பாதிப்பு டூ மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்’- ருதுராஜ் கெய்க்வாட்டின் எழுச்சிப் பயணம்

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதின. இதில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 65 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். இந்தச் சூழலில் நடப்பு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் சந்தித்த தடைகள் என்ன? மகாராஷ்டிரா மாநிலம் பூனேவைச் சேர்ந்தவர் ருதுராஜ்...