வெள்ளிக்கிழமை, ஜனவரி 22, 2021
Home அண்மை செய்திகள் ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு தகுதி

இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர், சாக்‌ஷி சவுத்ரி ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

சீனாவில் நடைபெற இருந்த குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிகள், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 13 வீரர் வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர்

இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் கசாக்ஸ்தானின் ரிம்மாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் சிம்ரன்ஜித் போட்டியை வென்றார். அடுத்த போட்டியில் மங்கோலியாவின் நமுன் மான்கோரை எதிர்கொள்கிறார்.

57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்‌ஷி, தாய்லாந்தின் நிலாவானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 4-1 என்ற கணக்கில் சாக்‌ஷி வெற்றி பெற்றார். 19 வயதேயான இந்த இளம் வீராங்கனை, அடுத்த போட்டியில் கொரியாவின் இம் ஏஜியை எதிர்கொள்கிறார்.

முதல் நாளான நேற்று, இந்தியாவுக்கு இரண்டு வெற்றி. ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் கவுரவ் சோலாங்கி முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். காமென்வெல்த் சாம்பியனான இவர், கிர்கிஸ்தானின் அகெல்பெக் எஸன்பெக் எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

இதே போல, 75 கிலோ எடைப்பிரிவில் ஆஷிஷ் குமார் வெற்றி பெற்றுள்ளார். தாய்வானின் சியா-வெய் எதிரான போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:

இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)

இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)

பிரிஸ்பேனில் 2003ல் ஆஸி.யை வெளுத்து வாங்கிய கங்குலியை போல் நாளை யார் செய்வார்?

சவுரவ் கங்குலி
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. பிரிஸ்பேன் மைதானம் எப்போதும் ஆஸ்திரேலிய அணியின் கோட்டையாக இருந்துள்ளது....