TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

'இன்னும் ஒரு வெற்றி,ஒலிம்பிக் தேர்ச்சி’ இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் நம்பிக்கை

இன்னும் ஒரு வெற்றி,ஒலிம்பிக் தேர்ச்சி’ இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் நம்பிக்கை
X
By

Karthiga Rajendran

Published: 23 Jan 2020 3:02 AM GMT

கடந்த சில ஆண்டுகளில், ஏற்றமும் இறக்கமுமாய் இருக்கும் இந்திய டேபிள் டென்னிஸின் இப்போதைய கனவு – ஒலிம்பிக் 2020-க்கு தேர்ச்சி பெறுவதுதான். ஜனவரி 22-ம் தேதி தொடங்கிய 2020 ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் விளையாடினர். தகுதிச்சுற்றில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்கள், ‘இன்னும் ஒரு வெற்றி..ஒலிம்பிக் தேர்ச்சி’ என்பதை உறுதி செய்துள்ளனர்.

டேபிள் டென்னிஸ் உலக தரவரிசை பட்டியலில்,

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய அணி ஐந்தாவது இடத்தில் உள்ளது. நேற்று நடைபெற்ற

தகுதிச்சுற்று போட்டியில், லக்சம்பர்க் அணியை இந்தியா எதிர்கொண்டது.

முதலில், இந்தியாவின் சரத் கமல், ஹர்மீத் தேசாய் இணை, லக்சம்பர்க்கின் மிச்லி கில்ஸ், எரிக் க்ளோட் இணையை எதிர்கொண்டனர். இதில், 11-9, 16-14, 11-6 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்தது.

இந்திய டேபிள் டென்னிஸ்

இதனை தொடர்ந்து, இந்தியாவின் நட்சத்திர

வீரர் சத்தியன், லூக்கா மிலாடனோவிக்கை எதிர்கொண்டார். இந்த போட்டியை சத்தியன்

எளிதாக வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, போட்டி மாற்றம் கண்டது.

தொடக்கத்தில் சுமாராக விளையாடிய சத்தியன், பின்னரே சுதாரித்து கொண்டு விளையாட

ஆரம்பித்தார் சத்தியன்.

இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை

எடுத்தனர். இறுதியில் 8-11, 9-11, 11-13, 13-11, 11-6 என்ற கணக்கில் சத்தியன்

போட்டியை வென்றார். இதன் மூலம், இந்திய அணி 2-0 என முன்னிலை வகித்தது.

மூன்றாவது போட்டியில், சரத் கமல் - எரிக்

க்ளோட் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே சரத் கமல் அதிரடியாக விளையாடி

வந்தார். 11-3, 11-3, 12-14, 11-5 என்ற செட் கணக்கில் சரத் கமல் தனது வெற்றியை

உறுதி செய்தார்.

இதனால், 3-0 என இந்திய அணி போட்டியை வென்று அசத்தியது. அடுத்து, ஸ்லோவேனியாவை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இன்னும் ஒரு ‘டையில்’ இந்திய அணி வெற்றி பெற்றால், 2020 ஒலிம்பிக் தொடருக்கு தேர்ச்சி பெறுவது உறுதியாகிவிடும்.

மணிக்கா பத்ரா அசத்தல்

இதே போல, பெண்களுக்கான போட்டியில் இந்தியா - ஸ்வீடன் அணிகள் மோதின. இரட்டையர் பிரிவில் அய்யிகா முகர்ஜி, அர்சனா காமத் ஜோடி 7-11, 10-12, 15-17 என்ற செட் கணக்கில் மடில்டா எக்கோம், கிறிஸ்டீனா கால்பர்க்கிடம் தோல்வியைத் தழுவினர்

அடுத்து நடந்த ஒற்றையர் பிரிவு

போட்டியில், 11-4, 6-11, 11-7,11-7 என்ற

செட் கணக்கில் லிண்டா பெர்க்ஸ்டார்மை மணிக்கா பத்ரா வீழ்த்தினார். இதன் மூலம் 1-1

என்ற கணக்கில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி சமமானது

மற்றுமொரு ஒற்றையர் போட்டியில்,

எக்கோமிடம் தோல்வியைத் தழுவினார் அய்யிகா முகர்ஜி. இம்முறை மீண்டும், அடுத்த

போட்டியில் கால்பர்க்கை மணிக்கா பத்ரா வென்றார். 2-2 என மீண்டும் இரு அணிகளுக்கு

இடையே சமமான நிலையில், கடைசி போட்டியில் கட்டாய வெற்றி தேவைப்பட்டது.

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில்

முன்னிலையில் இருக்கும் பெர்க்ஸ்டார்மை எதிர்கொண்ட காமத், 11-8, 8-11, 9-11, 11-7,

13-11 என்ற செட் கணக்கில் காமத் வெற்றி பெற்றார். இறுதியில், 3-2 என்ற கணக்கில்

இந்திய மகளிர் டையை வென்றனர். இன்னும் ஒரே ஒரு வெற்றி, இந்திய டேபிள் டென்னிஸை

2020 ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வழிவகுக்கும்

Next Story
Share it