அண்மை செய்திகள்
டேபிள் டென்னிஸ்: ஹங்கேரி ஓபன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஷரத் - சத்யன் இணை
ஐடிடிஎஃப் டேபிள் டென்னிஸ் ஹங்கேரி ஓபன் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் ஷரத் கமல் - சத்யன் இணை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது
ஹாங்காங்கின் முன்னணி இணை குவான் கிட் ஹோ - சன் திங் வோங் இந்திய வீரர்கள் தோற்கடித்தனர். அரை இறுதிப்போட்டியில் 11-7, 12-10, 4-11, 4-11, 11-9 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் போராடி வென்றனர். இதன் மூலம், ஹங்கேரி ஓபன் தொடரில் முதன் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
இறுதிப்போட்டியில், ஜெர்மனியின் துடா பெனெடிக்ட் - ப்ராஸிக்கா பேட்ரிக்கை எதிர்கொள்ள உள்ளனர். இத்தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தமிழக வீரர்கள் இறுதிப்போட்டியை வென்று ஹங்கேரி ஓபன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல காத்திருக்கின்றனர்.
கலப்பு இரட்டையர் பிரிவி போட்டி அரை இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல் - மணிக்கா பத்ரா இணை தோல்வியுற்றது. சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஜெர்மன் இணையை எதிர்கொண்ட அவர்கள், 0-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியுற்றனர். இதனால், இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணி, வெண்கலப் பதக்கம் வென்றது.