திங்கட்கிழமை, ஜனவரி 18, 2021
Home அண்மை செய்திகள் “மறைந்த என் அப்பாவுக்காக இந்த விருது” - இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் உருக்கம்

“மறைந்த என் அப்பாவுக்காக இந்த விருது” – இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் உருக்கம்

1999-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு மன்பிரீத் இப்போது சொந்தக்காரர்.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்று சார்பில், இந்திய அணி கேப்டன் மன்பிரீத் சிங்கிற்கு, 2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஹாக்கி வீரர் விருது வழங்கப்பட்டது.

1999-ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், சிறந்த ஹாக்கி வீரர் விருதை பெறும் முதல் இந்தியர் என்ற பெருமைக்கு மன்பிரீத் இப்போது சொந்தக்காரர். இந்த விருதுக்கு 6 ஹாக்கி வீரர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில், அதிக வாக்குகள் பெற்று மன்பிரீத் சிங் வெற்றி பெற்றார்.

இது குறித்து பேசியுள்ள மன்பிரீத், “என்னுடைய விளையாட்டு பயணத்தில் எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களும் நன்றிகள். ஆனால், என்னுடைய அப்பாவை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டியது அவசியம். அவர் இப்போது இருந்திருந்தால், என்னை கண்டு பெருமைப்பட்டிருப்பார். எனக்கு எப்போதும் துணையாய் இருந்த அவருக்கு இந்த விருதை சமர்ப்பிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

2011-ம் ஆண்டு தேசிய அணியில் அறிமுகமான மன்பிரீத், சிறப்பான பயணத்தை மேற்கொண்டுள்ளார். மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி, 2019-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 2020 ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பங்கேற்பது உறுதியானது. ஏற்கனவே, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி சார்பாக மன்ப்ரீத் விளையாடியுள்ளார்.

இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும், முக்கியமான வீரராகவும் தனது இடத்தை பதிவு செய்துள்ளார் மன்பிரீத் சிங்.

பேட்ஸ்மென் வாஷிங்டனை அன்றே கணித்த ராகுல் திராவிட்!

வாஷிங்டன் சுந்தர்
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் அறிமுக வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார். இவர் முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்பின்னர் நேற்று இந்திய அணியின் பேட்டிங்கில் 7ஆவது விக்கெட்டிற்கு வாஷிங்டனும் தாகூரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அறிமுக வீரராக தனது முதல் இன்னிங்ஸில்...