அண்மை செய்திகள்
இன்ஸ்டாகிராம் உலக பிரபலங்கள் பட்டியலில் டாப்-25 இடங்களுள் வந்த கோலி,அனுஷ்கா!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அதிகம் பின் தொடரப் படுகிறார். இவர் கிரிக்கெட் களத்தில் சாதனைப் படைப்பது போல சமூக வலைத்தளம் மற்றும் விளம்பரங்கள் ஆகியவற்றிலும் சாதனைப் படைத்துள்ளார். அந்தவகையில் தற்போது உலகளவில் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் பட்டியலில் விராட் கோலி இடம்பிடித்து அசத்தியுள்ளார்.
View this post on Instagram
உலகளவில் மிகவும் பிரபலமான இன்ஸ்டாகிராம் கணக்குகள் பட்டியலில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரோனால்டோ முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 11ஆவது இடத்தை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பிடித்துள்ளார். அத்துடன் இப்பட்டியலில் 17ஆவது இடத்தை இந்திய பிரதமர் மோடி பிடித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து பாலிவுட் நடிகையும் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா 24ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியில் டாப்-25 இடங்களுக்குள் வந்து இவர்கள் மூவரும் அசத்தியுள்ளனர். இவர்கள் தவிர கட்ரினா கைஃப், தீபிகா படுகோனே ஆகியோர் 43ஆவது மற்றும் 49ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.
விராட் கோலி-அனுஷ்கா சர்மா ஜோடி கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தது. அண்மையில் இவர்கள் இருவரும் தங்களுக்கு குழந்தை பிறக்க உள்ள செய்தியை ட்விட்டரில் பகிர்ந்தனர். இந்த ட்வீட் 2020ஆம் ஆண்டு அதிக லைக்ஸ் பெற்ற ட்வீட்டாக அமைந்தது. சமூக வலைத்தளங்களில் அதிகம் பின்தொடரப் பட்டு வரும் பிரபலமான ஜோடிகளில் கோலி-அனுஷ்கா ஜோடியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள்”- கோலியிடம் கூறிய ரசிகர்கள்