TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகும் இந்திய வீரர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து விலகும் இந்திய வீரர்கள்
X
By

Ajanth Selvaraj

Published: 5 March 2020 9:51 PM IST

உலகெங்கும் அனைவருக்கும் தற்போதுள்ள ஒரே பிரச்சினை கொரோனா வைரஸ் மட்டும் தான். விளையாட்டு வீரர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. முக்கிய தொடர்கள் பல ரத்து செய்யப்பட்டுவரும் நிலையில், வீரர்களும் தொடர்களில் இருந்து விலகி வருகின்றனர். மார்ச் 11 தொடங்க இருந்த இந்த தொடரில், ஒற்றையர் பிரிவு வீரர்களான பிரன்னாய், சமீர் வர்மா மற்றும் சவ்ரப் வர்மா ஆகியோர் விலகியுள்ளனர். இவர்களோடு இரட்டையர் பிரிவு வீரர்களான சிராக், சாத்விக் ஜோடி மற்றும் மனு, சுமித் ஜோடியும் விலகியுள்ளது. ஆனால் முன்னனி வீரர்களான ஶ்ரீகாந்த், சாய் பிரனீத் மற்றும் சிந்து ஆகியோர் இந்த தொடரில் விளையாடவுள்ளனர். மேலுமொரு வளர்ச்சியாக ஹைதராபாத்திலுள்ள கோபி சந்த் அகாடமியில் பயிற்சிபெறும் அனைத்து வீரர்களும் பாதுகாப்பு காரணமாக அவரவர் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story
Share it