TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

‘முழுசா ஹர்பஜனாக மாறிய ரோகிதை பார்’- ட்விட்டரில் ட்ரெண்டான வீடியோ!

‘முழுசா ஹர்பஜனாக மாறிய ரோகிதை பார்’- ட்விட்டரில் ட்ரெண்டான வீடியோ!
X
By

Ashok M

Published: 6 Feb 2021 12:18 PM GMT

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் சென்னையில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய ரசிகர்கள் சற்று சோர்ந்து இருந்தனர்.

இந்நிலையில் தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரை இந்திய அணியின் ரோகித் சர்மா வீசினார். அப்போது அவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் போல பந்துவீசி அனைவரையும் ஈர்த்தார். அவர் ஹர்பஜன் போல துள்ளி குதித்து பந்துவீசினார். இதுதொடர்பான வீடியோ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டது.

இந்த வீடியோ ட்விட்டர் பக்கத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் ரோகித் சர்மாவின் இந்த பந்துவீச்சு தொடர்பாக பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: அரசியல் நோக்கத்திற்காக விளையாட்டு பிரபலங்கள் பயன்படுத்தப் படுகிறார்களா?

Next Story
Share it