TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

‘மேரா நாம் ஹை வாஷிங்டன்’- ரிஷப் பண்ட்டின் ஜாலியான கமெண்ட் வீடியோ

‘மேரா நாம் ஹை வாஷிங்டன்’- ரிஷப் பண்ட்டின் ஜாலியான கமெண்ட் வீடியோ
X
By

Ashok M

Published: 5 Feb 2021 6:22 PM IST

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் கடந்து அசத்தினார்.

இன்றைய போட்டியின் 70ஆவது ஓவரை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசினார். அப்போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட் வாஷிங்டன் சுந்தரின் பெயரை வைத்து ஜாலியாக கமெண்ட் அடித்தார். அவர், ‘மேரா நாம் ஹை வாஷிங்டன்; மேரே கோ ஜானா ஹை டிசி’ எனக் கூறினார். அதாவது ‘என்னுடைய பெயர் வாஷிங்டன்; நான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு செல்ல விரும்புகிறேன்’ எனக் கூறினார்.

ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். தற்போது ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ள நிலையில் வாஷிங்டன் சுந்தரை டெல்லி அணிக்கு அழைக்கும் வகையில் இதனை கூறியுள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் 2016ஆம் ஆண்டு சேர்ந்து யு-19 உலகக் கோப்பை அணியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னையின் எஃப்சி வீரர்கள்!

Next Story
Share it