திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் புஜாரா தொடர்பான இனவெறி பட்டப் பெயரை வர்ணனையின் போது எடுத்த வார்ன்

புஜாரா தொடர்பான இனவெறி பட்டப் பெயரை வர்ணனையின் போது எடுத்த வார்ன்

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா பேட்டிங் செய்த போது அவருடைய பட்டப் பெயர் தொடர்பாக வர்ணனையில் இருந்த ஷேன் வார்ன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. இந்திய வீரர் புஜாரா பேட்டிங் செய்த போது அவருடைய பட்டப் பெயர் தொடர்பாக வர்ணனையில் இருந்த ஷேன் வார்ன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீரர் புஜாரா இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றார். அப்போது இவர் யார்க்‌ஷேர் அணிக்காக விளையாடினார். அங்கு இருந்த வீரர்கள் இவரை ‘ஸ்டீவ்’ என்று அழைத்துள்ளனர். ஆனால் சமீபத்தில் இந்தப் பெயரை அவர்கள் இனவெறி காரணமாக வைத்தனர் என்று ஒரு யார்க்‌ஷேர் வீரர் புகார் அளித்திருந்தார்.

ஏனென்றால் அந்த கவுண்டி அணியில் ஒரு நிற வீரர்களை ஸ்டீவ் என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். இந்தச் சூழலில் தற்போது அந்தப் பெயரை வார்ன் வர்ணனையின் போது பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வார்னின் இந்தச் செயலை பலரும் ட்விட்டரில் கண்டித்து வருகின்றனர். இதுகுறித்து வார்ன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் இந்தப் பெயரில் புஜாராவை அழைப்பதை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கும் அதிரடி நாயகன் யுவராஜ் சிங் !

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...