அண்மை செய்திகள்
இந்திய ஜெர்ஸியில் முதல் போட்டியில் களமிறங்கும் யார்க்கர் நடராஜன்!

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் கான்பராவில் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக முதல் முறையாக நடராஜன் இன்று களமிறங்குகிறார்.
A massive day for @Natarajan_91 today as he makes his #TeamIndia debut. He becomes the proud owner of 🧢 232. Go out and give your best, champ! #AUSvIND pic.twitter.com/YtXD3Nn9pz
— BCCI (@BCCI) December 2, 2020
ஐபிஎல் தொடரின் போது சிறப்பான யார்க்கர் பந்துகளை வீசி அனைவரின் கவனத்தையும் நடராஜன் ஈர்த்தார். அப்போது தனது கனவு இந்திய அணிக்கு ஒருநாள் நிச்சயம் ஆட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரின் அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது. இந்திய அணியின் இடம்பெற்றுள்ள நடராஜனுக்கு பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேலத்தின் சின்னப்பம்பட்டியிலிருந்து வந்து இந்திய அணியில் விளையாடியுள்ள நடராஜன் பல இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக திகழந்துள்ளார். இந்திய அணிக்காக விளையாடியுள்ள இடது கைபந்துவீச்சாளர்கள் பட்டியலில் நடராஜன் இன்று இணைந்துள்ளார். கர்சரண் கார்வி, ரஷித் பட்டேல்,ஷாகிர் கான், இர்ஃபான் பதான், ஆஷிஷ் நெஹ்ரா, ஆர்.பி.சிங், கலீல் அகமது, ப்ரேந்தர் சரண் உள்ளிட்ட வீரர்கள் நிறைந்த பட்டியலில் நடராஜன் இன்று இணைந்துள்ளார்.
மேலும் படிக்க: தடைகளை வென்று சாதனைப் படைத்த சின்னப்பம்பட்டி ‘யார்க்கர்’ நாயகன் நடராஜன்