திங்கட்கிழமை, மார்ச் 1, 2021
Home அண்மை செய்திகள் ஏன்? எதற்கு?- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !

ஏன்? எதற்கு?- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ரோகித் சர்மா 44 ரன்களுடன் அவுட் ஆகினார்.

ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடி வந்தார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை அவர் சிறப்பாக எதிர்கொண்டார். மறுமுனையில் கில் வேகமாக அவுட் ஆகினாலும் இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். அவருடைய கவனமான ஆட்டத்தை பார்த்தவுடன் இன்று ரோகித் சர்மா சதம் கடந்து அசத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.

எனினும் 44 ரன்கள் எடுத்திருந்த போது லயான் பந்துவீச்சில் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ரோகித் அவுட் ஆகினார். இவரின் விக்கெட் ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சி அடைய செய்தது. குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், “எதற்காக அந்த ஷாட். நீங்கள் சரியாக தான் விளையாடி கொண்டிருந்தீர்கள். பிறகு ஏன் இந்த ஷாட். ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் இந்தச் சூழலில் அடிக்கும் ஷாட் இது அல்ல” என வர்ணனையில் தெரிவித்தார்.

இதேபோல ரசிகர்கள் பலர் தங்களின் ஆதங்கத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஏன் ஏதற்காக இந்த ஷாட் என்றும், ரோகித் சர்மா ரன் அடிப்பதை அவரே தடுக்கிறார் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: இந்தியா-ஆஸி. டெஸ்ட்: வேகப்பந்துவீசிய ரோகித் சர்மாவை கலாய்த்த தினேஷ் கார்த்திக் !

அரசியல் களத்தில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி!

மேற்கு வங்காளத்தின் ஹெளரா மாநிலத்தைச் சேர்ந்தவர் மனோஜ் திவாரி. இவர் 2008-ஆம் ஆண்டு இந்தியாவிற்காக விளையாட தொடங்கினார். இவரின் அதிரடியான ஆட்டத்திற்காக பல இந்தியர்களின் பாராட்டைப் பெற்றவர். ஆனால் தொடர் காயம் காரணமாக இவர் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பிடிக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள்...