அண்மை செய்திகள்
மகளிர் டி20 உலகக்கோப்பையில் சொதப்பிய நட்சத்திர வீராங்கனைகள்
ஏழாவது முறையாக நடந்து முடிந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பையினை, இந்தியாவினை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய மகளிர் அணி. இந்த உலகக்கோப்பை முழுவதும் பல சிறந்த ஆட்டங்கள், பல மெய் சிலிர்க்கும் பெர்ஃபாமன்ஸ்கள் இருந்துள்ளன. ஆனால் சில நட்சத்திர வீராங்கனைகள் யாரும் எதிர்பாராத விதமாக சிறப்பாக விளையாடவில்லை. அவர்களுல் சிலரை பற்றி காண்போம்:
ஹர்மன்பீரித் கவுர்:
இந்த உலகக்கோப்பையின் மிகப்பெரிய ஏமாற்றம் என்றால் அது நிச்சயமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பீரித்தின் பேட்டிங் ஃபார்ம் தான். அனைவரின் எதிர்ப்பார்பிற்கு மாறாக மிக மோசமான பேட்டிங்கினை வெளிப்படுதினார். விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்ட முடிந்தது. அதிலும் 20 ரன்களுக்கு குறைவாக தனது விக்கெட்டினை இழந்தார். அவர் அவுட்டாகும் விதம் மேலும் கவலையளிப்பதாக இருந்தது. பொருப்பாக ஆட வேண்டிய கேப்டனே தேவையில்லாத ஷாட்கள் அடித்து தனது விக்கெட்டினை எளிதாக பறிகொடுத்தது அணியன் நம்பிக்கையை குலைப்பதாக இருந்தது. மொத்தத்தில் இந்த உலகக்கோப்பையானது ஹர்மன்பீரித் என்ற மட்டையாளருக்கு நிச்சயம் மறக்கக்கூடிய ஒன்றாகும்.
ஸ்மிருதி மந்தானா:
உலகத்தின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர். இந்திய பேட்டிங்கின் முக்கிய அச்சாரம். ஆனால் அனைத்து ரசிகர்களின் நம்பிக்கைக்கு எதிர்மாறாக இந்த உலகக்கோப்பையில் இவர் பெரிதாக சோபிக்கவில்லை. விளையாடியதில் ஒரு ஆட்டத்திலும் கூட 20 ரன்களுக்கு மேல் அடிக்காமல் மிகுந்த ஏமாற்றம் அளித்தார். இறுதிப்போட்டியில் ஃபார்மிற்கு திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையையும் பொய்யாக்கி தேவையற்ற ஷாட் அடித்து அவுட்டானர். இதன் மூலம் இந்திய அணியின் கோப்பை கனவும் தகர்ந்தது.
ஹெய்லெ மேத்யூஸ்:
வெஸ்ட் இன்டீஸ் அணியன் நம்பர் 1 ஆல்ரவுண்டர். அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் உலக ஆல்ரவுண்டரகளுக்கான தரவரிசையில் 4ஆவது இடத்தில் இருப்பவர். ஆனால் இந்த உலகக்கோப்பையில் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு இவர் அளித்தது ஏமாற்றம் மட்டுமே. பேட்டிங் மற்றும் பெளலிங் என இரண்டிலும் சொதப்பல். இந்த உலகக்கோப்பை முழுவதும் இவர் ஒரு விக்கெட்டினை கூட வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.