அண்மை செய்திகள்
ஐசிசி மகளிர் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கிரிக்கெட் விளையாட்டினை நிர்வகிக்கும் ஐ சி சி கூட்டமைப்பு அடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பை தொடர்கள் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைவரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்தில் 2021 பிப்ரவரியில் நடக்க இருந்த மகளிர் 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தற்போது 2022 பிப்ரவரியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி யின் தற்போதய சேர்மன் இம்ரான் க்வாஜா கூறியதாவது, " கடந்த சில மாதங்களாகவே நாங்கள் இதுகுறித்து ஆலோசித்து வந்தோம். அனைவரின் உடல்நலமே தற்போது முதன்மையானதாகும். இதற்கு ஒத்துழைப்பு அளித்த இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு நன்றி."
ஐசிசி முதன்மை அதிகாரி மனு சாவ்னே கூறியதாவது, " அனைத்து வீரர்களுக்கும் உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தொடருக்கு தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகளும் தொடர்ந்து நடைபெறும். கோவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடக்கவில்லை. மேலும் இந்த ஆண்டு முழுவதும் எந்த போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை. அதனால் இந்த ஒரு வருட அவகாசம் அனைவருக்கும் மிகுந்த உதவியாக இருக்கும்." மேலும் உலகக்கோப்பைக்கு ஏற்கனவே தகுதிப்பெற்ற ஐந்து அணிகளும் தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்க தேவையில்லை. மற்ற மூன்று அணிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகள் 2021ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
[embed]https://twitter.com/M_Raj03/status/1291750366996869120[/embed]
2017ல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணியினை இறுதிப்போட்டியில் வீழ்த்தி இங்கிலாந்து அணி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. 2021 50 ஓவர் உலகக்கோப்பை இந்திய மற்றும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான மித்தாலி ராஜ் விளையாடயிருந்த கடைசி உலகக்கோப்பையாகும். இத்தொடர் ஒத்திவைப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிகளுக்கு சிறப்பாக தயாராக இதனை வாய்ப்பாக எடுத்து கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.