TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

பிபிஎல் - கைகொடுக்காத கஷ்யப்பின் வெற்றி.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது மும்பை

பிபிஎல் - கைகொடுக்காத கஷ்யப்பின் வெற்றி.. ஹைதராபாத்திடம் வீழ்ந்தது மும்பை
X
By

Karthiga Rajendran

Published: 2 Feb 2020 5:54 PM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து

ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கில்

நடைபெற்ற இன்றைய டையில், ஹைதராபாத் ஹண்டர்ஸ் - மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

இந்த டையின் முதல் போட்டியில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டி நடந்தது. இதில்,

ஹைதராபாத்தின் லேன் - இவனோவ் இணை, மும்பையின் ஜங் - ரங் இணையை எதிர்கொண்டது.

10-15, 8-15 என்ற நேர் செட் கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது.

அடுத்து நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், லியூ - கஷ்யப் மோதினர். இதில், 8-15, 13-15 என மும்பை அணி கேப்டன் கஷ்யப் இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தார். இது டிரம்ப் கேம் என்பதால் மும்பைக்கு ஒரு புள்ளி கூடுதலாக கிடைத்து. இதனால் இரண்டு போட்டிகளின் முடிவில், 0-3 என்ற புள்ளிக்கணக்கில் மும்பை முன்னிலை பெற்றது

சிந்து

ஆனால். அடுத்த நடந்த மூன்று போட்டிகளையும் ஹைதராபாத் அணி வென்றது. பெண்களுக்கான

ஒற்றையர் பிரிவு போட்டியில் 15-5, 15-10 என்ற நேர் செட் கணக்கில் சிந்து வென்றார்.

இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்த பிறகு, இந்த

போட்டியில் சிந்து வென்றுள்ளார்.

மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், ராஜாவாத் - கியூன் மோதினர்.

இந்த போட்டியில், 15-13, 15-9 என்ற செட் கணக்கில் ராஜாவாட் வென்றார்

கடைசியாக கலப்பு இரட்டையர் பிரிவு போட்டி நடந்தது. இதில், மும்பையின் ரங் -

பெர்னாடெத்துக்கு எதிரான போட்டியில் 15-8, 15-8 என்ற செட் கணக்கில் ஹைதராபாத்தின்

இவனோவ் - என்.எஸ் ரெட்டி இணை வென்றது

இதனால் ஐந்து போட்டிகளின் முடிவில், 4-3 என்ற புள்ளிக்கணக்கில் ஹைதராபாத்

ஹண்டர்ஸ் வென்றது. நாளை நடக்க இருக்கும் டையில், அவாதி வாரியர்ஸ் - பூனே 7 ஏஸஸ்

அணிகள் மோதுகின்றன.

Next Story
Share it