TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

புரோ லீக் ஹாக்கி: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா போராடி தோல்வி 

புரோ லீக் ஹாக்கி: ஆஸி.க்கு எதிரான முதல் போட்டியில் இந்தியா போராடி தோல்வி 
X
By

Ashok M

Published: 21 Feb 2020 3:19 PM GMT

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் ஜனவரி மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் முதல் முறையாக இந்திய அணி பங்கேற்று உள்ளது. இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் பலம் வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்கொண்டது. அதில் ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் டிராவும் செய்தது. இதனையடுத்து பெல்ஜியம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்தது.

ஆஸ்திரேலியா

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய இடையேயான முதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வெதர்ஸூபூன் முதல் கோலை அடித்தார். இதன்பிறகு இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே முதல் கால் பாதி ஆட்டத்தின் இறுதியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது கால் பாதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் மிகவும் வேகமாக முயற்சிகளை மேற்கொண்டனர். ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டாம் விக்ஹேம் கோல் அடித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்திய ஹாக்கி அணி

மூன்றாவது கால்பாதியில் இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் 39ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் ராஜ்குமார் பால் கோல் அடித்தார். இதன்மூலம் இந்திய 1-2 என்று முன்னிலையை குறைத்தது. எனினும் ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் ஹார்பும், 43ஆவது நிமிடத்தில் ஆண்டர்செனும் கோல் அடித்து 4 -1 என்று ஆஸ்திரேலிய அணியின் கோல் எண்ணிக்கையை உயர்த்தினர். மூன்றாவது பாதியின் இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-1 என்று முன்னிலை பெற்றது.

ருபீந்திர் பால் சிங்

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கடைசி கால் பாதி ஆட்டத்தில் தொடக்கத்திலேயே ராஜ்குமார் பால் கோல் அடித்து 2-4 என முன்னிலை சற்று குறைந்தது. பின்னர் மீண்டும் ஒரு முறை கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் இந்தியாவின் ருபீந்திர் பால் சிங் கோல் அடித்து 3-4 என்று கோல் இடைவேளியை மீண்டும் குறைத்தார். இறுதியில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வி அடைந்தது.

கடைசி கால் பாதியில் இரு கோல்கள் அடித்தும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் போராடி தோல்வி அடைந்தது.

Next Story
Share it