அண்மை செய்திகள்
ஹாக்கி புரோ லீக் தொடர்: முதல் முறையாக களமிறங்கும் இந்திய ஆடவர் அணி
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச் சார்பில் புரோ லீக் என்ற தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான புரோ லீக் தொடர் இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் ஹாக்கி புரோ லீக் தொடரில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள புரோ லீக் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.
இதில்
இந்திய அணி பங்கேற்கும் முதல்
போட்டி வரும் 18ஆம்
தேதி நடைபெற உள்ளது.
அதில்
இந்திய அணி பலம் வாய்ந்த
நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்தப்
போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரிலுள்ள
கலிங்கா மைதானத்தில் நடைபெற
உள்ளது.
இரண்டாவது
போட்டியும் நெதர்லாந்து
அணியுடன் 19ஆம்
தேதி நடைபெற உள்ளது.
இதனைத்
தொடர்ந்து இந்திய அணி பிப்ரவரி
8 மற்றும்
9ஆம்
தேதிகளில் உலக சாம்பியன்
பெல்ஜியத்துடன் ஒடிசாவில்
மோதவுள்ளது.
அதன்பின்னர்
பிப்ரவரி 22
மற்றும்
23ஆம்
தேதிகளில் நடப்பு ப்ரோ லீக்
சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன்
விளையாட உள்ளது.
இதனையடுத்து
பெர்லினில்(ஏப்ரல்
25&26)
ஜெர்மனி
அணியுடனும்,
லண்டனில்(மே
2 &3)
பிரிட்டன்
அணியுடனும் இந்திய அணி விளையாட
உள்ளது.
அதன்பின்னர்
மீண்டும் இந்தியாவில் நடைபெறும்
போட்டியில் (மே
23&24)நியூசிலாந்து
அணியை எதிர்கொள்கிறது.
அதனைத்
தொடர்ந்து (ஜூன்
5&6)அர்ஜென்டினா
அணியுடனும் இறுதியாக (ஜூன்
13
&14)ஸ்பேயின்
அணியுடனும் விளையாடுகிறது.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால் புரோ லீக் ஹாக்கி போட்டிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புரோ லீக் தொடரில் இந்திய அணி பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக மோத உள்ளது சிறந்த பயிற்சியாக அமையும். மேலும் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு முக்கிய அணிகளுடன் ஒருமுறை விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் தங்களின் தவறுகளை கண்டறிந்து உத்திகளை மாற்றி அமைப்பதற்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.
இந்திய
அணி கடைசியாக 2018ஆம்
ஆண்டு நடைபெற்ற ஹாக்கி உலகக்
கோப்பை தொடரில் 2-1
என்ற
கோல் கணக்கில் நெதர்லாந்து
அணியிடன் தோற்று வெளியேறியது.
அந்தப்
போட்டியும் ஒடிசாவின் புவனேஷ்வர்
மைதானத்தில் நடைபெற்றது.
இதனால்
தற்போது நடைபெறும் போட்டியில்
அதற்கு இந்திய அணி வீரர்கள்
தகுந்த பதிலடி கொடுப்பார்கள்
என்று கருதப்படுகிறது.
கடைசியாக நெதர்லாந்து அணியுடன் விளையாடிய 10 போட்டிகளில் 5ல் நெதர்லாந்து அணியும், 4 ல் இந்திய அணியும் வெற்றிப் பெற்று உள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. ஹாக்கி புரோ லீக் தொடரில் அனைத்து ஆட்டங்களின் முடிவில் எந்த அணி அதிக புள்ளிகளுடன் உள்ளதோ அந்த அணிக்கு புரோ லீக் கோப்பை வழங்கப்படும். கடந்த முறை நடைபெற்ற புரோ லீக் தொடரில் அதிக புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.
இந்த முறை இந்திய அணி தனது முதல் புரோ லீக் பயணத்தை வெற்றியுடன் துவக்கும் வகையில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியில் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நடுகள வீரர் சிங்லென்சானா மீண்டும் இடம்பிடித்துள்ளார். அதேபோல தடுப்பு ஆட்டக்காரரான ருபீந்தர் பால் சிங்கும் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.