TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

'காந்தியும் கால்பந்து விளையாட்டும்'- காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்

காந்தியும் கால்பந்து விளையாட்டும்- காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்
X
By

Ajanth Selvaraj

Published: 2 Oct 2020 9:39 AM GMT

மகாத்மா காந்தி - இந்திய சுதந்திரப் போராட்டித்தின் முதன்மையானவர், தேசத் தந்தை என அழைக்கப்படுபவர். இவருடைய பிறந்தநாளான இன்று இவருக்கும் கால்பந்துக்கும் உள்ள நீண்ட தொடர்பினை பற்றி காண்போம். இவரது அஹிம்சை வழியிலான போராட்டத்திற்கு கால்பந்து பெரிதும் உதவியுள்ளது.

சவுத் ஆப்பிரிக்காவில் இவர் வாழ்ந்த காலங்களில் மூன்று கால்பந்து அணிகளை தொடங்கியுள்ளார். கால்பந்து மீதான இவரது ஈர்ப்பு இங்கிலாந்தில் சட்ட படிப்பு பயின்ற போதிலிருந்தே தொடங்கியது. அதன் பிறகு சவுத் ஆப்பிரிக்கா வந்து தனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து டர்பின், பிரிட்டோரியா மற்றும் ஜோகன்னஸ்பர்க் ஆகிய இடங்களில் கால்பந்து அணிகளை உருவாக்கினார். மூன்று அணிகளுக்குமே 'பேஸ்ஸிவ் ரெஸிஸ்டர்ஸ்' என்ற பெயரினையை சூட்டினார். கால்பந்து வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க காந்தி உபயோகித்த முக்கிய விஷயம் பின்னாளில் அவர் இந்திய சுதந்திரப் போராட்டித்தின் போது உபயோகித்த சத்தியாகிரகம் தான்.

கால்பந்து மூலம் தனது கருத்துக்களை பரப்பி தன்னையும் அங்கு முன்னிறுத்தி கொண்டார். வெற்றி பெற்ற ஆட்டங்கள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு அஹிம்சை வழியில் போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உதவிகள் செய்தார். 1914லில் இந்தியா திரும்பிய பிறகும் இந்த கால்பந்து அணிகளை அவர் கைவிடவில்லை. சவுத் ஆப்பிரிக்காவின் முதல் முழுமையான கால்பந்து அணி கிறிஸ்டோபர்'ஸ் கான்டின்ஜன்ட் காந்தியின் ஆசிப் பெற்ற தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் விளையாடய வீரர்கள் பலர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த அணிக்கு பண உதவி செய்தவர் காந்தியுடன் 1913லிலீ நடைபெற்ற லேபர் ஸ்ட்ரைக்கில் பங்கேற்ற ஆல்பர்ட் கிறிஸ்டோபர் ஆகும்.

காந்தி ஜெயந்தி ஆன இன்று மகாத்மா காந்தியை ஒரு சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாமல் கால்பந்து விளையாட்டினை நேசித்தவராகவும் நினைவு கூறுவோம்.

மேலும் படிக்க: ஓய்விற்கு பிறகு வெப் சீரிஸ் தயாரிப்பில் இறங்கிய தோனி

Next Story
Share it