அண்மை செய்திகள்
ஹாக்கி புரோ லீக் தொடர்: முதல் 2 போட்டிகளிலும் நெதர்லாந்தை வீழ்த்தியது இந்திய அணி
சர்வதேச
ஹாக்கி கூட்டமைப்பான எஃப்.ஐ.ஹெச்
சார்பில் புரோ லீக் என்ற தொடர்
கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு
வருகிறது.
அந்தவகையில்
இந்த ஆண்டிற்கான புரோ லீக்
தொடர் இம்மாதம் 11ஆம்
தேதி தொடங்கி ஜூன் மாதம் 28ஆம்
தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தத்
தொடரில் முதல் முறையாக இந்திய
ஆடவர் ஹாக்கி அணி பங்கேற்று
உள்ளது.
இந்திய
அணி முதலில் நெதர்லாந்து
அணியை எதிர்கொண்டது.
இந்த
இரு அணிகளுக்கு இடையேயான
முதல் போட்டி நேற்று புவனேஷ்வரில்
நடைபெற்றது.
அந்தப்
போட்டியில் சிறப்பாக விளையாடிய
இந்திய அணி 5-2
என்ற
கோல் கணக்கில் வெற்றிப்
பெற்றது.
இந்நிலையில்
இந்த இரு அணிகள் இடையேயான
இரண்டாவது போட்டி இன்று
நடைபெற்றது.
இதில்
முதல் கால் பகுதியில் இரு
அணிகளும் கோல் போட எடுத்த
முயற்சிகளுக்கு பலன்
கிடைக்கவில்லை.
இதனைத்
தொடர்ந்து ஆட்டத்தின் 25ஆவது
நிமிடத்தில் நெதர்லாந்து
வீரர் மிக் வண்டர் வீர்டன்
பெனால்டி கார்னர் வாய்ப்பை
பயன்படுத்தி முதல் கோலை
அடித்தார்.
அடுத்த
நிமிடத்திலேயே இந்தியாவின்
லலித் குமார் பதில் கோலை
அடித்தார்.
இதனால்
ஆட்டம் மிகவும் விறுவிறுப்பு
அடைந்தது.
மீண்டும்
27ஆவது
நிமிடத்தில் ஜெரோன்
ஹெர்ட்ஸ்பெர்கர் கோல் அடிக்க
நெதர்லாந்து அணி 2-1
என
முன்னிலை பெற்றது.
அதனைத்
தொடர்ந்து மீண்டும் நெதர்லாந்தின்
கெல்லர்மேன் கோல் அடித்தார்.
முதல்
பாதி ஆட்டத்தின் முடிவில்
இந்திய அணி 1-3
என்ற
பின் தங்கி இருந்தது.
மூன்றாவது
கால் பகுதி ஆட்டத்தில் இந்திய
கோல் அடிக்க எடுத்த முயற்சிகள்
அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
கடைசி
மற்றும் நான்காவது கால்
பகுதியில் இந்திய வீரர்கள்
சற்று துடிப்புடன் விளையாட
ஆரம்பித்தனர்.
அப்போது
கிடைத்த பெனால்டி கார்னர்
வாய்ப்பில் மன்தீப் சிங்
கோல் அடித்து 3-2
என்று
இடைவேளியை குறைத்தார்.
பின்னர்
ஆட்டம் முடிய 5
நிமிடங்களே
இருந்த நிலையில் கிடைத்த
பெனால்டி கார்னர் வாய்ப்பை
சரியாக பயன்படுத்திய ரூபிந்தர்
பால் சிங் கோல் அடித்து 3-3
என்று
சமன் செய்தார்.
ஆட்ட
நேர இறுதியில் இரு அணிகளும்
3-3
என்று
சமனில் இருந்ததால்,
வெற்றியாளரை
தீர்மானிக்க பெனால்ட்டி ஷூட்
அவுட் முறை மேற்கொள்ளப்பட்டது.
இதில்
இந்திய அணி 3
கோல்
அடிக்க நெதர்லாந்து அணி ஒரு
கோல் மட்டும் அடித்து மற்ற
மூன்று வாய்ப்புகளையும் தவற
விட்டது.
நெதர்லாந்து
அணியின் வீரர்களின் முயற்சியை
இந்திய கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ்
சிறப்பாக தடுத்தார்.
இதனால்
இந்திய அணி ஷூட் அவுட் முறையில்
3-1
என்ற
கணக்கில் நெதர்லாந்து அணியை
வீழ்த்தியது.
முதல்
முறையாக களமிறங்கி உள்ள ஹாக்கி
புரோ லீக் தொடரில் பலம் வாய்ந்த
நெதர்லாந்தை இரண்டு போட்டிகளிலும்
வீழ்த்தி இந்திய அணி அசத்தியுள்ளது.
இந்திய
அணி அடுத்து வரும் பிப்ரவரி
8
மற்றும்
9ஆம்
தேதி உலக சாம்பியன் பெல்ஜியத்தை
எதிர்கொள்கிறது.
இந்தப்
போட்டிகளும் புவனேஷ்வரில்
நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.