அண்மை செய்திகள்
வில்வித்தை வீராங்கனை பவானி தேவியின் பயிற்சி தள்ளிப் போக காரணம் என்ன?

உலகம் முழுவது கொரோ வைரஸ் தாக்கம் இன்னும் நீடித்து கொண்டு தான் உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்தக் கால கட்டம் அனைவருக்கும் மிகவும் சவால் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது. அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு இது மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
ஏனென்றால் விளையாட்டு வீரர்களின் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தடைபட்டு உள்ளது. இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவில் தற்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் அவை விளையாட்டு வீரர்களுக்கு சற்று கடினமானதாகதான் உள்ளன.
அந்தவகையில் இந்திய வில்வித்தை வீராங்கனையான தமிழகத்தின் சி.ஏ.பவானி தேவி சற்று சிரமப்பட்டு வருகிறார். சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால் அவரால் இங்கு பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. இதனால் ஃபென்சிங் சங்கம் மூலம் அவர் பயிற்சி செய்ய வசதியான இடத்தை தருமாறு கடிதம் எழுதப்பட்டது.
அதற்கு மத்திய விளையாட்டு ஆணையம் சார்பில் பவானி தேவி பட்டியாலாவிலுள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளது. எனினும் பவானி தேவி தனது அம்மாவின் உடல்நல குறைவால் அங்கு செல்ல விரும்பவில்லை என்று ஃபென்சிங் சங்கத்திடம் தெரிவித்துள்ளார். மேலும் அங்கு தற்போது பயிற்சி செல்லும் போது தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதாலும் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் கடிதத்தையும் எழுதியுள்ளார்.