அண்மை செய்திகள்
சமூகவலைதளத்தில் வைரலாகும் #YuziCanDance என்ற நடன சேலஞ்ச்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று வரலாறு படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை அளித்தது.
எனினும் அந்த தோல்வியைவிட இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல் போட்ட பதிவு ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் சற்று அந்தப் பதிவின் மீது திரும்பியுள்ளது. அது என்ன பதிவு? அது தற்போது வைரலாக என்ன காரணம்?
இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை இட்டிருந்தார். அதில் அவரும் சக வீரர்களுமான ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் தூபே ஆகியவர்கள் நடனமாடும் வகையில் ஒரு வீடியோ பதிவை இட்டிருந்தார்.
இந்தப் பதிவு தற்போது வைரலாக காரணம் அதனை இந்திய கிரிக்கெட் அணி முக்கிய ரசிகர் பட்டாளமான 'பாரத் ஆர்மி' தனது பக்கத்தில் பதிவிட்டு ஒரு போட்டியை ஆரம்பித்துள்ளது. அதாவது #YuziCanDance என்ற சேலஞ்சை அறிவித்துள்ளது.
இதில் ரசிகர்கள் பங்கேற்று சாஹல் வீடியோவிற்கு இணையான நடன வீடியோவை பதிவிட்டு #YuziCanDance என்ற ஹேஸ்டேக்கை இட்டி பாரத் ஆர்மியை டேக் செய்ய வேண்டும். இதில் வரும் சிறந்த பதிவுகளை பாரத் ஆர்மி ட்விட்டர் பதிவு செய்யும்.
இதனை மேற்கொள் காட்டி இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியமும் தனது ட்விட்டர் பக்கத்தில் #YuziCanDance என்ற சேலஞ்சில் அனைவரும் கலந்து கொண்டு தங்களது வீடியோ பகிருங்கள் என்று பதிவிட்டுள்ளது. அத்துடன் அந்தப் பதிவிற்கு யுஸ்வேந்திர சாஹல் பதில் அளிப்பார் என்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தற்போது ட்விட்டர் இந்த ஹேஸ்டேக் மிகவும் வைரலாகி வருகிறது. நீங்களும் ஒரு டிக்டாக் அல்லது இன்ஸ்டாகிராம் விரும்பியாக இருந்தால் இந்தச் சேலஞ்சில் பங்கேற்று உங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.