அண்மை செய்திகள்
ஊரடங்கால் தடகள பயிற்சி இடமாக மாறிய நீலகிரி வெலிங்டன் மலை ரயில் நிலையம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவைகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள வெலிங்டன் ரயில் நிலையம் தடகள பயிற்சி இடமாக மாறியுள்ளது. எப்போதும் சுற்றுலா பயணிகள் மற்றும் மலை ரயிலை வரவேற்கும் வெலிங்டன் தற்போது தடகள வீரர்களை ஈர்த்து வருகிறது. இது எப்படி சாத்தியம்?
ஊட்டி மலை ரயில் பாதையில் மிகவும் முக்கியமான ரயில் நிலையம் வெலிங்டன் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையம் மிகவும் பழைமை வாய்ந்த ஒன்று. இந்த ரயில் நிலையம் சினிமா படப்பிடிப்பை அதிகம் ஈர்த்துள்ளது. தற்போது அது உள்ளூர் தடகள் வீரர்களுக்கு பயிற்சி இடமாக மாறியுள்ளது.
இந்த தடகள பயிற்சி தொடர்பாக பயிற்சியாளர் அசாரூதின் ‘த பிரிட்ஜ்’ தளத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், “கொரோனா ஊரடங்கால் எங்களுக்கு விளையாட்டு மைதானங்களில் பயிற்சி செய்ய அனுமதி கிடைக்கவில்லை. எனவே நாங்கள் வெலிங்டன் ரயில் நிலையத்தை பயிற்சி இடமாக வைத்துள்ளோம். இங்கு 15 தடகள வீரர்கள் தினமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் சமூக இடைவேளியை கடைபிடித்து தான் பயிற்சி செய்து வருகின்றனர்.
காலையில் மூன்று முக்கிய தடகள வீரர்கள் பயிற்சி செய்வார்கள். மாலையில் சில ஜூனியர் வீரர்களும் பயிற்சிக்கு வருவார்கள். என்னுடைய பயிற்சியில் தடகள பயிற்சியில் ஶ்ரீகிரண் நந்தகுமார் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்றார். அவரை ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தற்போது தயார் செய்து வருகிறேன். மேலும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கும் வீரர்களை தயார் செய்து வருகிறேன்.
தடகளத்தில் உள்ளூர் வீரர்கள் அதிகம் வரவேண்டும். அதற்காக நான் கூடிய விரைவில் ஒரு அகாடமி அமைத்து பயிற்சியை தொடங்க உள்ளேன் ” எனத் தெரிவித்துள்ளார்.
தடகளத்தில் லெவல்-2 பயிற்சியாளராக இளம் அசாரூதின் செயல்பட்டு வருகிறார். இவரின் மாணவரான ஶ்ரீகர் நந்தகுமார் அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பது இவரது முக்கிய விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “கேல் ரத்னா விருது கிடைத்தவுடன் கண்ணீர் விட்டு அழுதேன்”- ஹாக்கியின் முடிசூடா ராணி