TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தனுஷ்?

விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தனுஷ்?
X
By

Ashok M

Published: 15 Dec 2020 2:25 AM GMT

இந்தியாவின் செஸ் ஜாம்பவான் வீரர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் சமீபத்தில் தனது 51ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருடைய பிறந்தநாள் அன்று விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது என்ற செய்திகள் வெளியாகின. இதனை கடந்த ஞாயிற்றுகிழமை அதிகாரப்பூர்வமாக வெளிவந்த அறிவிப்பு உறுதியாக்கியது.

இந்தப் படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்குகிறார். இதனை சன்டையல் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கலர் யெல்லோ தயாரிப்பு நிறுவனம் ஆகிய இரண்டும் சேர்ந்து தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தும் தனது ஒப்புதலை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்திற்கு 'கிராண்ட் மாஸ்டர்' எனப் பெயர் இடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் ஆனந்த் எல் ராய் இந்தப் படத்தில் விஸ்வநாதன் ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கெனவே தனுஷ் மற்றும் ஆனந்த் எல் ராய் கூட்டணி 'ரஞ்சானா' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அந்தப் படம் பாலிவுட் தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் தற்போது மீண்டும் அந்தக் கூட்டணி அக்‌ஷய் குமாருடன் இணைந்து ஒரு படத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

விஸ்வநாதன் ஆனந்த்- ஆனந்த் எல் ராய் விஸ்வநாதன் ஆனந்த்- இயக்குநர் ஆனந்த் எல் ராய்

அந்தப் பாலிவுட் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்- ஆனந்த் எல் ராய் கூட்டணி விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் இணைவார்கள் என்று கருதப்படுகிறது. நடிகர் தனுஷ் விஸ்வநாதன் ஆனந்தின் தீவிர ரசிகர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் இணைந்த இந்தப் படத்தில் பணியாற்றுவார்கள் எனத் தெரிகிறது.

அதேபோல மறுபுறம் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாற்றில் மற்றொரு தமிழ் நடிகர் மாதவன் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி வருகிறது. எனவே தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை யார் அந்தப் படத்தின் கதாநாயகன் என்பது தெளிவாக தெரியாது. விரைவில் இந்தப் படம் தொடர்பான முழு அறிவிப்பும் வெளியாகும் என்று கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: இன்ஸ்டாகிராம் உலக பிரபலங்கள் பட்டியலில் டாப்-25 இடங்களுள் வந்த கோலி,அனுஷ்கா!

Next Story
Share it