Begin typing your search above and press return to search.
அண்மை செய்திகள்
முதல் முறையாக ஏஎப்சி கால்பந்துப் போட்டியில் பங்கேற்கும் சென்னை சிட்டி எப் சி
சென்னை சிட்டி எப் சி தங்களது முதல் ஏசியன் ஃபுட்பால் கான்ஃபெடரேஷன் கோப்பை ஆட்டத்தினை, சென்னையிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் விளையாட உள்ளது. சென்னையில் முதன்முறையாக நடக்கப்போகும் ஏஎப்சி கோப்பை போட்டியும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஎப்சி மற்றும் ஏஐஎப்எப் ஆகியோரிடம் இருந்து அனுமதி பெற்றபிறகு, நடப்பு ஐ-லீக் சாம்பியனான சென்னை சிட்டி அணி தங்களது முதல் ஏஎப்சி ஆட்டத்தில் மாலத்தீவினை சேர்ந்த மஷியா எஸ் ஆர்சி அணியினை மார்ச் 11 அன்று எதிர்கொள்கிறது. இதில் மற்றொரு சிறப்பம்சமாக, இந்த ஆட்டத்தினை காண பயணிக்கும் அனைத்து ரசிகர்களின் முழு பயணச் செலவினையும் சென்னை சிட்டி நிர்வாகமே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுளது. இதனால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story