திங்கட்கிழமை, நவம்பர் 30, 2020
Home அண்மை செய்திகள் பீகார் தேர்தலில் வெற்றிப் பெற்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஸி சிங்!

பீகார் தேர்தலில் வெற்றிப் பெற்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஸி சிங்!

பீகார் மாநிலத்தின் ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் போட்டியிட்டார்.

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகள் நேற்று வெளியாகியன. இதில் பீகார் மாநிலத்தின் ஜமுய் தொகுதியில் பாஜக சார்பில் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரேயாஸி சிங் போட்டியிட்டார். இவர் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் வேட்பாளர் விஜய் பிரகாஷை எதிர்த்து களம் கண்டார்.

இந்தத் தேர்தலில் ஸ்ரேயாஸி சிங் 41ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் பிரகாஷை தோற்கடித்தார். ஸ்ரேயாஸி சிங் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தை திக்விஜய் சிங் நிதீஷ் குமாரின் நெருங்கிய நண்பர். இவருடைய தாய் புட்டூல் குமாரி மக்களவை எம்பியாக 2014ஆம் ஆண்டு தேர்வாகினார்.

ஸ்ரேயாஸி சிங் அரசியலுக்கு வரும் முன்னர் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையாக இருந்தார். இவர் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் டபிள் டிராப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமென்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இவர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்தவுடன் அவருக்கு இந்தத் தேர்தலில் ஜமுய் தொகுதி வழங்கப்பட்டது. இந்தத் தொகுதி இரண்டு முறை எம்.எல்.ஏ வாக இருந்த பலம் வாய்ந்த விஜய் பிரகாஷை ஸ்ரேயாஸி தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: விராட் கோலியை நிராகரித்த ஐபிஎல் அணி எது தெரியுமா? – ஃபிளாஷ்பேக்

கேரளாவில் பிறந்தநாள் கொண்டாடிய டியாகோ மரடோனா!

மரடோனா (கோப்புப் படம்)
கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா நம்முடன் தற்போது இல்லை என்ற செய்தியை இப்போதும் உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அனைவரும் அவருக்கான மரியாதையை செலுத்தி வருகின்றனர், குறிப்பாக அவரை தங்களில் ஒருவராக கருதும் இத்தாலியின் நேபிள்ஸ் நகர மக்கள். அதேபோல் இந்தியாவிலும் ஒரு மாநிலத்தில் மரடோனாவினை போற்றி கொண்டாடுவார்கள். கால்பந்து விளையாட்டினை உயிராக நினைக்கும் கேரள மக்கள் தான்....