TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

வாள்வீச்சு விளையாட்டில் ஓங்கி உயர்ந்திருக்கும் வீர தமிழச்சி: சி.ஏ.பவானி தேவி

வாள்வீச்சு விளையாட்டில் ஓங்கி உயர்ந்திருக்கும் வீர தமிழச்சி: சி.ஏ.பவானி தேவி
X
By

Ashok M

Published: 17 Jan 2020 4:48 PM GMT

இந்தியாவில்

மிகவும் பரிட்சயப்படாத

விளையாட்டுகளில் ஒன்று

ஃபென்சிங்.

அதாவது

வாள்வீச்சு விளையாட்டு.

இந்த

விளையாட்டில் மூன்று வகைகள்

உள்ளன.

அவற்றில்

சேபர் ஃபென்சிங் ரக வாள்வீச்சு

போட்டியில் களம் கண்டு வருபவர்

சி.ஏ.பவானி

தேவி.

தனது

பள்ளி பருவத்தில் வகுப்புகளை

புறக்கணிப்பதற்காக ஏதாவது

விளையாட்டை தேர்வு செய்ய

பவானி தேவி முடிவு செய்துள்ளார்.

அந்த

சமயத்தில் அவரது பள்ளியில்

அனைத்து விளையாட்டுகளுக்கும்

தேவையான நபர் சேர்ந்து விட்டதாக

கூறியுள்ளார்கள்.

ஃபென்சிங்

கடைசியாக

ஃபென்சிங்(வாள்வீச்சு)

விளையாட்டிற்கு

மட்டும் ஆள் தேவைப்படுகிறது

என்று கேட்டுள்ளனர்.

அப்போது

விளையாட்டு தனமாக பவானி தேர்வு

செய்த விளையாட்டு நாளடைவில்

அவரது அடையாளமாக ஆகும் என்று

அவர் நினைத்து கூட பார்த்திருக்க

மாட்டார்.

தனது

14

வயது

முதல் பவானி தேவி சர்வதேச

ஃபென்சிங் போட்டிகளில்

பங்கேற்று வருகிறார்.

அப்போது

முதல் சர்வதேச ஃபென்சிங்

போட்டிகளில் தங்கப்பதக்கம்

வெல்ல வேண்டும் என்று தீவிர

முயற்சியில் ஈடுபட்டார்.

இவரின்

வீடா முயற்சி மற்றும் சரியான

பயிற்சியால் 9

ஆண்டுகளுக்கு

பிறகு 2017-ல்

சர்வதேச அரங்கில் தனது முதல்

தங்கப்பதக்கத்தை தட்டினார்.

பவானி தேவி தங்கப்பதக்கம்

2017-ஆம்

ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில்

நடைபெற்ற உலக

சாட்டிலையிட் ஃபென்சிங்

போட்டியில் தங்கப்பதக்கம்

வென்றார்.

இதன்மூலம்

ஃபென்சிங் போட்டியில் தங்கம்

வென்ற முதல் இந்திய வீராங்கனை

என்ற சாதனையை பவானி தேவி

படைத்தார்.

அத்துடன்

ஃபென்சிங் விளையாட்டில்

சர்வதேச அளவில் இந்தியர்

ஒருவர் பதக்கம் வெல்வது அதுவே

முதல் முறையாகும்.

இதனைத்

தொடர்ந்து 2018ஆம்

ஆண்டு நடைபெற்ற சீனியர்

காமென்வெல்த் ஃபென்சிங்

சாம்பியன்ஷிப்பில் பவானி

தேவி தங்கப்பதக்கம் வென்று

சாதனைப் படைத்தார்.

அதேபோல

2019ஆம்

ஆண்டு பெல்ஜியத்தில் நடைபெற்ற

சர்வதேச சாம்பியன்ஷிப்

போட்டியில் வெள்ளிப் பதக்கம்

வென்றார்.

இந்தாண்டு

டோக்கியோவில் நடைபெறும்

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

பெறுவதே தனது முக்கிய லட்சியமாக

கொண்டு பவானி தேவி ஒவ்வொரு

போட்டிகளிலும் களமிறங்கி

வருகிறார்.

சேபர் ஃபென்சிங்

இவரின்

சமீபத்திய வெற்றிகள் அவரது

சர்வதேச தரவரிசையை உயர்த்தும்

வகையில் உள்ளது.

இதனால்

இந்த ஆண்டு ஒலிம்பிக் தகுதி

பெறும் வாய்ப்பு பவானி தேவிக்கு

அதிகமாக உள்ளது.

இவ்வாறு

ஒலிம்பிக் போட்டிக்கு பவானி

தேவி தகுதி பெற்றுவிட்டால்,

ஒலிம்பிக்

ஃபென்சிங் போட்டியில்

களமிறங்கும் முதல் இந்தியர்

என்ற சாதனையை பவானி தேவி

படைப்பார்.

பவானி

தேவி விளையாடும் சேபர் ஃபென்சிங்

பிரிவில் எதிராளியின் மேல்

உடம்பு பகுதியில் தொட்டால்

மட்டுமே புள்ளிகள் வழங்கப்படும்.

அதுவும்

கைகளில் தொட்டால் புள்ளிகள்

வழங்கப்பட மாட்டாது.

இதனால்

சேபர் ஃபென்சிங் புள்ளிகளை

பெற வேண்டும் என்றால் ஒருவர்

மிகவும் வேகமாகவும் துடிப்புடனும்

இருக்கவேண்டும்.

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி

அத்தகைய

சிறப்பான ஆட்டத்தை தற்போது

பவானி தேவி வெளிப்படுத்தி

வருகிறார்.

இவர்

சிறப்பாக விளையாடி இந்தாண்டு

நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக்

போட்டிக்கு தகுதி பெற்று

இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும்

பெருமை சேர்ப்பார் என்று

நம்புவோம்.

பவானி

தேவியின் கனவு நிறைவேற நாம்

அனைவரும் அவரை வாழ்த்துவோம்.

Next Story
Share it