TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

1 லட்சத்திற்கு ஏலம்..16 வயதில் பேட்மிண்டன் லீக்... கலக்கும் சென்னை சிறுவன்

1 லட்சத்திற்கு ஏலம்..16 வயதில் பேட்மிண்டன் லீக்... கலக்கும் சென்னை சிறுவன்
X
By

Karthiga Rajendran

Published: 20 Jan 2020 4:53 PM GMT

7 அணிகள் பங்கேற்கும் ப்ரீமியர் பேட்மிண்டன் லீகின் ஐந்தாவது சீசன் சென்னையில் இன்று தொடங்கியது. அவாதே வாரியர்ஸ், பெங்களூர் ராப்டர்ஸ், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், ஹைதரபாத் ஹண்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த்-ஈஸ்டெர்ன் வாரியர்ஸ், பூனே 7 ஏஸஸ் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இரண்டாவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி, இம்முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

சுமீத் ரெட்டி, த்ருவ் கபிலா, சாத்விக் சாய்ராஜ். லக்‌ஷயா சென் ஆகியோருடன் 11 பேர் சென்னை அணியில் உள்ளனர். குறிப்பாக, ஜூனியர்ஸ் பேட்மிண்டனில் அசத்திய இளம் வீரர் சங்கர் முத்துசாமி சென்னை அணியில் இடம் பிடித்துள்ளார். ஜூனியர் பிரிவில் சிறப்பாக விளையாடிய சங்கர் முத்துசாமி விளையாட்டு உலகின் கவனத்தை ஈர்த்தவர்.

சென்னையைச் சேர்ந்த இந்த இளம் பேட்மிண்டன் நட்சத்திரம், தனது ஐந்து வயதிலேயே விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளார். ஆரம்பத்தில், டென்னிஸ் விளையாடி வந்த சங்கர் பின்னர் பேட்மிண்டனில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்ட சங்கர், 2011-ம் ஆண்டு U-10 பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றார். தான் போட்டியிட்ட முதல் தொடரில் வெற்றி பெறாத சங்கருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே முதல் பதக்கம் கிடைத்துள்ளது.

அதே போல, தீவிரமான ‘டிஃபென்ஸ்’ வீரராக விளையாடி வந்த சங்கர் இப்போது ‘அட்டாக்கிங்கிலும்’ தேர்ச்சி பெற்று வருவதாக சொல்கிறார் அவரது பயிற்சியாளர் அரவிந்தன். 2017, U-15 தேசிய பேட்மிண்டன் ஜூனியர்ஸ் பட்டத்தை வென்ற சங்கர், அதே ஆண்டு இந்தியாவின் நம்பர் 1 பேட்மிண்டன் வீரராக தரவரிசையில் உயர்ந்தார்.

2017-ம் ஆண்டு முதல் இந்திய பேட்மிண்டனில் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார் சங்கர் முத்துசாமி. சென்னை அண்ணாநகரில் உள்ள ஃபையர் ஃபால் அகாடமியில் பயிற்சி எடுத்து வரும் சங்கர், ப்ரீமியர் பேட்மிண்டன் லீகில் சென்னை அணியில் இடம் பிடித்திருக்கும் முக்கிய வீரர்களில் ஒருவர்.

2019 பேட்மிண்டன் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில்

21-1,21-10 என வங்கதேச வீரர் அப்துல் லுக்மானை 17 நிமிடங்களில் தோற்கடித்து

அசத்தினார் சங்கர். ஜூனியர் போட்டிகளிலேயே வெளுத்து வாங்கும் இந்த பேட்மிண்டன்

நட்சத்திரம் இன்னும் பல சாதனைகளை படைக்க காத்திருக்கிறார். பேட்மிண்டன் உலக

சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற வேண்டும், ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்

என்பதே சங்கரின் முக்கிய குறிக்கோள். ஆனால், இப்போது ப்ரீமியர் பேட்மிண்டன் லீகில்

அசத்த ஆயுத்தமாகி வருகிறார். மிக இளைய வயதில் பி.பி.எல் தொடரில் பங்கேற்றுள்ள

வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
Share it