TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

2020 பி.பி.எல் - சொந்த மண்ணில் அவாதி வாரியர்ஸுக்கு முதல் வெற்றி

2020 பி.பி.எல் - சொந்த மண்ணில் அவாதி வாரியர்ஸுக்கு முதல் வெற்றி
X
By

Karthiga Rajendran

Published: 28 Jan 2020 6:25 PM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் லக்னோவில் நடைபெற்று வருகிறது. பாபு

பனாரசி தாஸ் யூ.பி பேட்மிண்டன் அகாடமியில் இன்று நடைபெற்ற டையில் அவாதி வாரியர்ஸ்

- மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோதின.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டையில், முதலாவதாக கலப்பு இரட்டையர் போட்டி

நடைபெற்றது. இந்த போட்டியில், மும்பையின் ரங் - பெர்னாடெத் இணை அவாதியின் ஹியூன் -

பெடெர்சன் இணையை வென்றது. 9-15, 14-15 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்றது.

அடுத்து நடைபெற்ற மூன்று ஒற்றையர் பிரிவு போட்டிகளிலும் அவாதி அணி ஆதிக்கம் செலுத்தியது சங் - கர்க் ஆகியோருக்கான எதிரான போட்டியில் 15-3, 15-4 என அதிரடியாக போட்டியை வென்றார் அவாதியின் சங்.

கஷ்யப்

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் மும்பையின் கஷ்யப் தொடர்ந்து ஏமாற்றம்

அளித்து வருகிறார். வின்செண்டை எதிர்கொண்ட இந்த போட்டியில், 15-8, 15-10 என்ற செட்

கணக்கில் கஷ்யப் வீழ்ந்தார். இது மும்பை அணியின் டிரம்ப் கேம் என்பதால், இதில் தோற்றதன்

மூலம் இருந்த 1 புள்ளியையும் இழந்தது.

மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், அவாதியின் ஜெயராம் 12-15, 15-6,

15-7 என்ற செட் கணக்கில் மும்பையின் கியூனை வென்றார்.

இதனை தொடர்ந்து கடைசியாக நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில், மும்பையின் ஜங்

- ரங் இணை போராடி வென்றது. 14-15, 15-10, 15-14 என்ற செட் கணக்கில் அவாதியின் ஹியூன்

- சியோல் இணை வென்றது.

ஐந்து போட்டிகளின் முடிவில், 5-0 என்ற புள்ளிகணக்கில் அவாதி அணி வெற்றி பெற்றது. ஹோம் கிரவுண்டில் அவாதி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அடுத்த நடக்க இருக்கும் போட்டியில் ஹைதராபாத் ஹண்டர்ஸ் - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன.

Next Story
Share it