அண்மை செய்திகள்
ஏடிபி சேலஞ்சர் பெங்களூரு, 2020 : இந்திய வீரர்கள் அசத்தல் பெர்ஃபாமன்ஸ்
ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில், ஏசியாவிலேயே அதிக பரிசுத்தொகை வழங்கும் போட்டியான ஏடிபி சேலஞ்சர் பெங்களூரு 2020, பிப்ரவரி 10 முதல் 16 வரை நடைபெறுகிறது. ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது. நேற்றைய ஆட்டங்களில் இந்தியாவை சேர்ந்த சாகேத் மைனேனி, சித்தார்த் ராவத் மற்றும் நிக்கி பூனாச்சா ஆகியோர் வெற்றி பெற்றனர்.இன்று நடந்த ஆட்டங்களிளும் இந்திய வீரர்கள் தங்களது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இன்று நடந்த முதல் ஆட்டத்தில் குவாலிஃபையர் போட்டிகளில் வென்று முக்கிய போட்டிகளுக்கு தகுதி பெற்ற தமிழகத்தை சேர்ந்த அபினவ் சண்முகம், அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தன்னை விட தரவரிசையில் பலமடங்கு முன்னனியில் இருக்கும் ஜெர்மனியை சேர்ந்த டேனியல் மசுரை நேர் செட்களில் (7-5, 6-3) வீழ்த்தினார். நடப்பு தேசிய சாம்பியனான நிக்கி பூனாச்சா, முன்னாள் டாப்-30 தரவரிசையில் இருந்த செக் குடியரைசை சேர்ந்த லூகாஸ் ராசோலை (6-4, 2-6, 6-3) என போராடி வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.மற்றொரு முன்னனி வீரரான சாகேத் மைனேனியும் தரவரிசையில் அதிக இடத்தில் இருக்கும் ரஷ்யாவை சேர்ந்த எவ்கெனி டான்ஸ்கோயை (6-3, 6-3) என வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.உலக தரவரிசையில் இந்தியாவிற்காக இரண்டாவது அதிக இடத்தில் இருக்கும் இளம் வீரரான சுமித் நகால் தனக்கு எதிராக விளையாடிய துனிசியாவை சேர்ந்த மலெக் ஜசிரியை (6-0, 6-4) என எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இரட்டையர் பிரிவில், முன்னனி இந்திய ஜோடியான ராம்குமார் ராமநாதன் மற்றும் புரவ் ராஜா மற்றொரு இந்திய ஜோடியான ஆதில் கல்யாண்பூர் மற்றும் பிரஜ்வாள் தேவ் ஆகியோரை (6-2, 6-2) என மிக எளிதாக வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு முன்னேறினர்.
நாளைய ஆட்டங்களில், இந்திய டென்னிஸ் ஜாம்பவானான லியான்டர் பயஸ் மற்றும் இந்திய முன்னனி வீரரான பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.