சனிக்கிழமை, ஜனவரி 23, 2021
Home அண்மை செய்திகள் குத்துச்சண்டை: 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தேர்ச்சி

குத்துச்சண்டை: 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் தேர்ச்சி

இதற்கு முன்பு, ஒரே நாளில் 5 இந்தியர்கள் தகுதி பெற்றனர். இதுவரை, 2020 குத்துச்சண்டை ஒலிம்பிக் தொடருக்கு 8 இந்தியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

6 முறை உலக சாம்பியனான மேரி கோம், 2020 குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியின் அரையிறுதியில் விளையாடினார். 51 கிலோ எடைப்பிரிவில் பிலிப்பைன்ஸ் வீராங்கனை ஐரிஷ் மேக்னோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் மேரி கோம் வென்றார்.  அரையிறுதியில் வெற்றி பெற்ற அவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மேரி கோம், இரண்டாவது முறையாக இப்போது ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதே போல, 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அமித் பங்கல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்தார்.  பிலிப்பைன்ஸ் வீரர் கேர்லோ பாலமை எதிர்கொண்ட அவர், 4-1 என்ற கணக்கில வெற்றி பெற்றார்.

60 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சிம்ரன்ஜித் கவுர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். மங்கோலியாவின் நமுன் மாங்கோரை எதிர்கொண்ட அவர், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம், குத்துச்சண்டை ஒலிம்பிக் தொடருக்கு 8 இந்தியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதற்கு முன்பு, ஒரே நாளில் 5 பேர் இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

75 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற பூஜா ராணி, தாய்லாந்தின் பூரர்னிப்பாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார். 69 கிலோ எடைப்பிரிவில் ஜப்பானின் சிவோன்ரெட்ஸ் ஓகசாவாவை விகாஷ் கிருஷ்ணன் வீழ்த்தினார்.  69 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் லோவ்லினா உஸ்பெக்கிஸ்தான் வீராங்கனை மெலீவாவை வீழ்த்தினார். இவரை அடுத்து, 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் குமாரும், 91 கிலோ எடைப்பிரிவில் சதிஷ் குமாரும் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஏன்? எதற்கு?- ட்விட்டரில் ரோகித் சர்மாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள் !

ரோகித் சர்மா
ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் ஆடி வந்தார். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை அவர் சிறப்பாக எதிர்கொண்டார். மறுமுனையில்...