TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: 3 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தேர்ச்சி

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று: 3 இந்திய வீரர்கள் காலிறுதிக்கு தேர்ச்சி
X
By

Karthiga Rajendran

Published: 6 March 2020 2:50 AM GMT

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை விளையாட்டுக்கான ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் ஜோர்டனில் தொடங்கி உள்ளது. மார்ச் 3-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ள தொடரில் பங்கேற்க இந்திய வீரர் வீராங்கனைகள் ஜோர்டன் விரைந்துள்ளனர்.

மூன்றாவது நாளான நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். 75 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் குமார், கிர்கிஸ்தான் வீரரை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் ஆஷிஷ் குமார் போட்டியை வென்றார். அடுத்த போட்டியில் மங்கோலியாவின் சின்சாரிக் பாட்டாசுருக்கை எதிர்கொள்கிறார்.

குத்துச்சண்டை

63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மனிஷ் கவுசிக், தாய்வானின் லாயை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் மனிஷ் கவுசிக் வெற்றி பெற்றார்.

மற்றுமொரு போட்டியில், 81 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சச்சின் குமார் போட்டியிட்டார். இந்த போட்டியில், சமோவாவின் ஐயோப்பாவை எதிர்கொண்ட அவர், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

குத்துச்சண்டை

காலிறுதிக்கு முன்னேறியுள்ள இந்த மூன்று வீரர்களும் ஒலிம்பிக் கனவை நெருங்கி உள்ளனர். மூவரும், இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால், ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ச்சி பெறுவர்.

இதற்கு முன்பு நடைபெற்ற போட்டிகளில், இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ) ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆசிய குத்துச்சண்டை ஒலிம்பிக் தகுதிச்சுற்று தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர் வீராங்கனைகளின் விவரம்:

இந்திய வீரர்கள்: அமித் பங்கல் (52 கிலோ), கவுரவ் சோலாங்கி (57 கிலோ), மனிஷ் கவுஷிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ)), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சச்சின் குமார் (81 கிலோ)), நமன் தன்வார் (91 கிலோ)), சதிஷ் குமார் (91+ கிலோ)

இந்திய வீராங்கனைகள்: மேரி கோம் (51 கிலோ), சாக்‌ஷி (57 கிலோ), சிம்ரன்ஜித் (60 கிலோ), லோவ்லினா (69 கிலோ), பூஜா (75 கிலோ)

Next Story
Share it