TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை இந்தியா vs நியூசிலாந்து: பலம் சேர்க்கும் 5 வீராங்கனைகள்

ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை இந்தியா vs நியூசிலாந்து: பலம் சேர்க்கும் 5 வீராங்கனைகள்
X
By

Karthiga Rajendran

Published: 26 Feb 2020 4:17 PM GMT

2020 ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில், ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ் அணிகளை வென்றயது இந்திய அணி. இப்போது ஹாட்-ட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் அடுத்த போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இதே போல, முதல் போட்டியில் ஶ்ரீலங்கா அணியை எதிர்கொண்ட நியூசிலாந்து, வெற்றியோடு இந்த சீசனை தொடங்கியுள்ளது.

இதுவரை டி-20 உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோயியுள்ளன. மூன்றில் நியூசிலாந்து இரண்டு முறையும், இந்திய அணி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. நாளை மெல்போர்னில் நடைபெறும் போட்டியில் இரு அணிகளிளும் கவனிக்கப்பட வேண்டிய வீராங்கனைகளை பற்றிய தொகுப்பு இது.

ஸ்மிரிதி மந்தானா

ஸ்மிரிதி

2020 டி-20 உலகக் கோப்பையில் இன்னும் ஸ்மிரிதியின் அதிரடி தொடங்கவில்லை. பங்ளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஓய்வுக்கு பிறகு அணியில் இடம் பெற்றிருக்கிறார் ஸ்மிரிதி. பலம் வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்ள, ஸ்மிரிதியின் ஓப்பனிங் ஆட்டம் சிறப்பாக இருந்தால் இந்திய அணிக்கு பலம் சேர்க்கும்

ஷாபாலி வெர்மா

ஷபாலி வர்மா

பங்ளாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஸ்மிரிதி இல்லாதபோதும், ஷாபாலியின் ஆட்டம் இந்திய அணியின் பேட்டிங்கை சீராக்கியது. ஷாபாலி இருக்கும் ஃபார்மில் நாளையும் அதிரடி காட்டினால், இந்திய அணியின் ஓப்பனிங் கூட்டணி சிறப்பான ஸ்கோரை எட்டி நியூசிலாந்துக்கு நெருக்கடி தரும். இதனால், நாளைய போட்டியில் ஷாபாலியின் ஆட்டம் முக்கியமானதாக இருக்கும்.

பூனம் யாதவ்

பூனம் யாதவ்

இந்தியாவின் பவுலிங் யூனிட்டில் துருப்புச் சீட்டாக உள்ளார் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ். நெருக்கடியான சூழ்நிலையிலும், தன்னுடைய அனுபவத்தால் போட்டியை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும் பூனம் யாதவின் பவுலிங் எப்போதுமே இந்தியாவுக்கு ப்ளஸ். பலம் வாய்ந்த நியூசிலாந்தின் பேட்டிங்கை கட்டுக்குள் வைக்க, நாளை பூனம் யாதவின் சுழல் மாயாஜாலம் பெரிதும் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

சோஃபி டிவைன்

சோஃபி டிவைன்

நியூசிலாந்து கேப்டன் சோஃபி டிவைன், கிவிக்கு முக்கியமான வீராங்கனை. ஶ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் சோஃபியின் 75* அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. இதே ஃபார்மில் நாளைய போட்டியிலும் சோஃபி கலக்கினால், இந்திய பவுலர்களுக்கு நெருக்கடியாக அமையும்

அமிலியா கேர்

அமிலியா கேர்

நியூசிலாந்து அணியின் இளம் ஆல்-ரவுண்டரான அமிலியா கேர், முக்கியமான வீராங்கனைகளில் ஒருவர். மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமனான அவர், நியூசிலாந்து அணியின் பேட்டிங்கை கரை சேர்ப்பவர். பவுலிங்கிலும் விக்கெட்டுகள் எடுத்து வரும் அமிலியா, நாளை போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story
Share it