TOKYO Olympics start in
:
Days
:
Hrs
:
Min
Sec
Begin typing your search above and press return to search.

அண்மை செய்திகள்

‘சென்னைக்கு இது கம்பேக், பூனேக்கு இது ஷாக்’ - பி.பி.எல் அப்டேட்!

‘சென்னைக்கு இது கம்பேக், பூனேக்கு இது ஷாக்’ - பி.பி.எல் அப்டேட்!
X
By

Karthiga Rajendran

Published: 1 Feb 2020 5:45 PM GMT

பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து

ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று

இரண்டு டைகள் நடந்தன.

முதல் டையில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் - அவாதி வாரியர்ஸ் அணிகள் மோதின. கடந்த டையில் பூனே 7 ஏஸஸிடம் தோல்விடைந்த சென்னை அணி, இந்த டையில் கம்-பேக் கொடுத்துள்ளது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், சென்னையின் லக்‌ஷ்யா சென் வெற்றி பெற்றார். தேவுக்கு எதிரான போட்டியில் 7-15, 8-15 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்று சென்னைக்கு முன்னிலை பெற்று தந்தார்.

லக்‌ஷயா சென்

அடுத்து நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் அவாதியின் ஹியூன் -

சோஸோனோவ் இணை சென்னையின் கபிலா - சாத்விக் இணையை வீழ்த்தியது.

மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சுதாரித்து கொண்ட சென்னை அணியின்

சுகியார்டோ, 10-15, 8-15 என்ற நேர் செட் கணக்கில் விண்செண்ட்டை தோற்கடித்தார்.

நான்காவது போட்டியான பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், சென்னையின்

காயத்ரி கோபிசந்த் ஏமாற்றம் அளித்தார். 15-10, 15-5 என்ற செட் கணக்கில் அவாதியின்

ஜங்கிடம் வீழ்ந்தார்.

இரு அணிகளும் மாறி மாறி ஜெயித்து வந்ததால், கடைசி போட்டி விறுவிறுப்பானது. கலப்பு இரட்டையர் போட்டியான இதில், 11-15, 15-13, 14-15 என சென்னை அணியின் சாத்விக் - புக் இணை போராடி வென்றது. இதனால் ஐந்து போட்டிகளின் முடிவில், 3-4 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை அணி வென்றது

பூனே 7 ஏஸஸ்

மாலை நடைபெற்ற மற்றுமொரு டையில், பூனே 7 ஏஸஸ் - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்

அணிகள் மோதினர். இந்த சீசனில் இதுவரை எந்த டையும் இழக்காத பூனே அணி, இன்று

சுருண்டது. ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியை மட்டுமே வென்றிருந்த பூனே அணி, 0-5

என்ற புள்ளிக்கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸிடம் தோல்வியடைந்தது.

அடுத்து நடக்க இருக்கும் டையில், ஹைதராபாத் ஹண்டர்ஸ்

- மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோத உள்ளனர்

Next Story
Share it