அண்மை செய்திகள்
‘சென்னைக்கு இது கம்பேக், பூனேக்கு இது ஷாக்’ - பி.பி.எல் அப்டேட்!
பிரீமியர் பேட்மிண்டன் லீக் போட்டிகள் சென்னை, லக்னோவை தொடர்ந்து
ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜி.எம்.சி பாலயோகி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று
இரண்டு டைகள் நடந்தன.
முதல் டையில், சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் - அவாதி வாரியர்ஸ் அணிகள் மோதின. கடந்த டையில் பூனே 7 ஏஸஸிடம் தோல்விடைந்த சென்னை அணி, இந்த டையில் கம்-பேக் கொடுத்துள்ளது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், சென்னையின் லக்ஷ்யா சென் வெற்றி பெற்றார். தேவுக்கு எதிரான போட்டியில் 7-15, 8-15 என்ற நேர் செட் கணக்கில் போட்டியை வென்று சென்னைக்கு முன்னிலை பெற்று தந்தார்.
அடுத்து நடந்த ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டியில் அவாதியின் ஹியூன் -
சோஸோனோவ் இணை சென்னையின் கபிலா - சாத்விக் இணையை வீழ்த்தியது.
மற்றுமொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் சுதாரித்து கொண்ட சென்னை அணியின்
சுகியார்டோ, 10-15, 8-15 என்ற நேர் செட் கணக்கில் விண்செண்ட்டை தோற்கடித்தார்.
நான்காவது போட்டியான பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், சென்னையின்
காயத்ரி கோபிசந்த் ஏமாற்றம் அளித்தார். 15-10, 15-5 என்ற செட் கணக்கில் அவாதியின்
ஜங்கிடம் வீழ்ந்தார்.
இரு அணிகளும் மாறி மாறி ஜெயித்து வந்ததால், கடைசி போட்டி விறுவிறுப்பானது. கலப்பு இரட்டையர் போட்டியான இதில், 11-15, 15-13, 14-15 என சென்னை அணியின் சாத்விக் - புக் இணை போராடி வென்றது. இதனால் ஐந்து போட்டிகளின் முடிவில், 3-4 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை அணி வென்றது
மாலை நடைபெற்ற மற்றுமொரு டையில், பூனே 7 ஏஸஸ் - நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்
அணிகள் மோதினர். இந்த சீசனில் இதுவரை எந்த டையும் இழக்காத பூனே அணி, இன்று
சுருண்டது. ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியை மட்டுமே வென்றிருந்த பூனே அணி, 0-5
என்ற புள்ளிக்கணக்கில் நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸிடம் தோல்வியடைந்தது.
அடுத்து நடக்க இருக்கும் டையில், ஹைதராபாத் ஹண்டர்ஸ்
- மும்பை ராக்கெட்ஸ் அணிகள் மோத உள்ளனர்